வைத்தியசாலையிலிருந்து வீடு சென்ற ராஜித தற்போது சீ.ஐ.டியில்!

14shares

லங்கா வைத்தியசாலையில் இருந்து நேற்று இரவு வௌியேறிய முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தற்போது வாக்கு மூலம் ஒன்றை வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு பிரிவில் முன்னிலையாகியுள்ளார் என தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மைத்திரி-ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தில் சுகாதார அமைச்சராகப் பதவிவகித்த ராஜித சேனாரத்ன ஜனாதிபதி தேர்தலுக்கு 05 தினங்களுக்கு முன்னர் நவம்பர் 11ஆம் திகதி கொழும்பில் ஊடக சந்திப்பொன்றை நடத்தியிருந்தார்.

அதில், தற்போதைய அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச, பாதுகாப்புச் செயலாளராக பதவிவகித்த காலப்பகுதியில் வெள்ளை வான் கடத்தல்களை செய்ததாகவும், அதற்கான உத்தரவுகளை அவர் வழங்கியமைக்கு இணங்க, 300க்கும் மேற்பட்டவர்களைக் கடத்தி கொலை செய்து முதலைகள் இருக்கும் குளங்களில் எறிந்ததாகவும் இந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டிருந்த இருவர் பரபரப்புத் தகவலை வெளியிட்டிருந்தனர்.

இதன் காரணமாக அவர் கைது செய்யப்பட்ட போது சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

ஸ்ரீலங்கா பொதுத் தேர்தலில் நடைபெற்ற ஐந்து சுவாரஸ்யமான சம்பவங்கள் - வெறும் 3000 வாக்குகளால் தெரிவான எம்.பி

ஸ்ரீலங்கா பொதுத் தேர்தலில் நடைபெற்ற ஐந்து சுவாரஸ்யமான சம்பவங்கள் - வெறும் 3000 வாக்குகளால் தெரிவான எம்.பி