ஸ்ரீலங்கா சுதந்திர தினத்தில் தேசிய கீதம் தமிழில் பாடப்படுமா? மகிந்த வழங்கிய விளக்கம்

157shares

ஜெனிவா விவகாரத்தினை நட்பு நாடுகளுடன் இணைந்து எதிர்கொள்வோம் என பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தமிழ் ஊடகப் பிரதானிகள் உடனான சந்திப்பு இன்று காலை அலரிமாளிகையில் இடம்பெற்றது.

இதன்போது பேசிய அவர், “ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான விவகாரத்தை நட்பு நாடுகளுடன் இணைந்து எதிர்கொள்வோம்.

இதுகுறித்து நட்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எவ்வாறாயினும் இம்மாதம் மார்ச்சில் இடம்பெறவுள்ள அமர்வில் இலங்கைக்கு எவ்வித சவால்களும் இல்லை.

இலங்கையில் பொதுத்தேர்தல் ஒன்று நடைபெறவுள்ளமை காரணமாக இலங்கை விவகாரம் குறித்து ஜெனிவாவில் பேசப்படாது என எதிர்பார்கின்றோம்.

இதன்போது, தேசிய கீதம் தமிழில் பாடுவதை ஏன் இந்த அரசாங்கம் நிறுத்தியது என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் வழங்கிய அவர்,

எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அப்படி சொல்லப்படவில்லை. அதே போன்று ஒரு சில நாடுகளில் தேசிய கீதம் அந்த நாட்டு பிரதான மொழியில் மட்டும் பாடப்படுகிறது.

வேறு சில நாடுகளில் பல்வேறு மொழிகளில் பாடப்படுகின்றன. என்ற போதும் அது ஒரே விடயத்தை தான் கூறுகிறது.

நான் தமிழ் பேசும் மக்கள் வாழும் பிரதேசங்களுக்கு ஏதாவது நிகழ்விற்காக சென்றால் நான் ஒருவர் சிங்கள மொழி தெரிந்தவர் என்பதற்காக சிங்கள மொழியில் தேசிய கீதம் பாட வேண்டும் என கேட்க முடியாது.

அங்கு வருகை தந்திருக்கும் மக்களில் பெரும்பான்மையினர் எம்மொழி மக்களோ அந்த மொழியில் தான் தேசிய கீதம் பாட வேண்டும்.

இது ஒரு பெரிய வாழ்க்கை பிரச்சினை கிடையாது. ஊடகவியலாளர்களாகிய நீங்களே இதனை புரிந்து கொள்ளாவிட்டால் மக்களுக்கு எப்படி புரியும்?

முன்னைய அரசாங்கம் தமிழ் மக்களுக்கு தேசிய கீதத்தை தமிழில் பாடியதை தவிர வேறு எதையும் செய்யவில்லை. அதையும் வாக்குகள் சேகரிப்பதற்காகவே செய்தது”என்றார்.

இதையும் தவறாமல் படிங்க
சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

ஸ்ரீலங்கா பொதுத் தேர்தலில் நடைபெற்ற ஐந்து சுவாரஸ்யமான சம்பவங்கள் - வெறும் 3000 வாக்குகளால் தெரிவான எம்.பி

ஸ்ரீலங்கா பொதுத் தேர்தலில் நடைபெற்ற ஐந்து சுவாரஸ்யமான சம்பவங்கள் - வெறும் 3000 வாக்குகளால் தெரிவான எம்.பி