நாமல் ராஜபக்ச வெளியிட்டுள்ள காணொளி! பதற வைக்கும் காட்சி- மகிந்த வழங்கிய உத்தரவு

710shares

கூண்டுக்குள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் நாயை துப்பாக்கியால் கொடூரமாக சுடும் காட்சியை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வெளியிட்டுள்ளார்.

தன்னுடைய உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் அவர் இந்தக் காட்சிகளை வெளியிட்டுள்ளார். கூண்டுக்குள் அடைக்கப்பட்டிருக்கும் நாயை, ஒருவர் துப்பாக்கியால் தொடர்ந்து சுடுகிறார். கடும் வேதனையில் அந்த நாய் கத்துகிறது.

எனினும் தொடர்ச்சியாக குண்டுகளை போட்டு மீண்டும் மீண்டும் நாயை சுட்டுக்கொண்டே இருக்கிறார் அந்த நபர்.

கடும் வலியினால் அந்த நாய் கத்திக்கொண்டே இருக்கிறது. இது தொடர்பில் குறிப்பிட்டுள்ள நாமல் ராஜபக்ச,

இதுபோன்ற ஈனச் செயலில் ஈடுபடும் குற்றவாளிகளை நீதிக்கு முன் கொண்டு வர தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு பிரதமர் மகிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளதாக நாமல் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் பதிவு வெளியிட்டுள்ள மகிந்த ராஜபக்ச, விலங்குகளுக்கு ஏற்பட்ட கொடுமைகள் குறித்த சம்பவங்களைக் கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன். மிக அண்மையில் நிகாவேரதியாவில் நாய்கள் கொல்லப்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது.

இக்கொடூரச் செயலில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
ஐந்து நாட்களுக்குள் வெளியேற வேண்டும்! சீன அரசாங்கம் அதிரடி உத்தரவு

ஐந்து நாட்களுக்குள் வெளியேற வேண்டும்! சீன அரசாங்கம் அதிரடி உத்தரவு

இந்தியா திண்டாடுகிறது: மோடியின் திட்டம் படு முட்டாள் தனமானது! ஒரே போடாகப் போட்டார் சுப்ரமணியன் சுவாமி

இந்தியா திண்டாடுகிறது: மோடியின் திட்டம் படு முட்டாள் தனமானது! ஒரே போடாகப் போட்டார் சுப்ரமணியன் சுவாமி

ஸ்ரீலங்காவிற்குள் இனி ஒருபோதும் இடமில்லை!  கோட்டாபய சூளுரை

ஸ்ரீலங்காவிற்குள் இனி ஒருபோதும் இடமில்லை! கோட்டாபய சூளுரை

loading...