தோண்டத்தோண்ட வெளிவரும் சடலங்கள்! அதிர வைக்கும் மர்மப் புதைகுழி!

951shares

மெக்ஸிகோவின் மேற்கு நகரமான குவாடலஜாராவுக்கு புறநகர் பகுதியில் உள்ள பெரிய புதைகுழியில் இருந்து 29 பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திட்டமிடப்பட்டு செய்யப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடைய மற்றும் வன்முறையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஜாலிஸ்கோ மாநிலத்தில் இந்த புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டது.

அதே பகுதியில் நவம்பர் முதல் மொத்தம் 80 சடலங்களை அதிகாரிகள் கண்டுபிடித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இறந்தவர்களில் நான்கு பேர் ஓரளவு அடையாளம் காணப்பட்டதாகவும், காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகளுடன் ஒத்துப்போவதாகவும்அந்நாட்டு வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த கல்லறை மற்றொரு பெரிய புதைகுழியில் இருந்து சுமார் 260 அடி தொலைவில் அமைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு குறைந்தது 50 பேரின் உடல்கள் கடந்த வருடம் டிசம்பரில் கண்டுபிடிக்கப்பட்டன. அதேபோன்று அதற்கு அருகிலேயே நவம்பரில் 31 சடலங்களும் கண்டெடுக்கப்பட்டன.

அதனையடுத்து நவம்பர் மாதம் தலாகேபாக் நகராட்சியில் மர்ம கிடங்கை கட்டுப்பாட்டில் எடுத்த தேசிய காவலர்கள், அங்கு கடத்தப்பட்ட 8 பேரை மீட்டு, ஆயுதங்களை பறிமுதல் செய்து 15 பேரை கைது செய்தனர். பின்னர், அங்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் மூன்று கல்லறைகளும் கண்டுபிடிக்கப்பட்டன.

அதற்கு முன்னர், குவாடலஜாரா புறநகரில் செப்டம்பர் 3ம் திகதி 34 சடலங்களுடன் ஒரு பெரிய புதைகுழியும் கண்டுபிடிக்கப்பட்டது, மற்றொரு இடம் மே மாதத்தில் 30 பேரின் எச்சங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டது.

ஜலிஸ்கோவில் ஜனவரி முதல் நவம்பர் வரை கிட்டத்தட்ட 2,500 கொலைகள் பதிவாகியுள்ளன. அங்கு பலம்வாய்ந்த ஜலிஸ்கோ நியூவா ஜெனரேஷன் கார்டெல் அமைந்துள்ளது என்று மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் தவறாமல் படிங்க
இங்கிலாந்து பிரதமர் விடுத்துள்ள எச்சரிக்கை - ஊரடங்கை அமுல்படுத்தவும் திட்டம்

இங்கிலாந்து பிரதமர் விடுத்துள்ள எச்சரிக்கை - ஊரடங்கை அமுல்படுத்தவும் திட்டம்

உயிர்த்தஞாயிறு தாக்குதல் -மைத்திரியின் பேரம் அம்பலம்

உயிர்த்தஞாயிறு தாக்குதல் -மைத்திரியின் பேரம் அம்பலம்

வெளியேறிய  ரணில் மற்றும் சுமந்திரன்!

வெளியேறிய ரணில் மற்றும் சுமந்திரன்!