கிளிநொச்சியில் தான் கண்ட காட்சியை மகிந்த முன் விபரித்த இராஜாங்க அமைச்சர்!

168shares

“தமிழ் மக்கள் இன்று பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். இதனால் அவர்களுக்கு அரசியல் தீர்வுக்கு முன்னர் பொருளாதார தான் வேண்டும் என இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

அலரிமாளிகையில் தமிழ் ஊடகங்களின் பிரதானிகளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.

இதன்போது கருத்துரைத்த அவர்,

“அண்மையில் கிளிநொச்சி மாவட்டத்திற்கு சென்றிருந்தேன். அங்குள்ள மக்கள் பாரிய குடிநீர் பிரச்சினையை எதிர் நோக்கியுள்ளனர்.

அதேபோன்று வடக்கின் சில இடங்களிலுள்ள மக்கள் உணவு மற்றும் குடி நீரினை பெற்றுகொள்வதில் பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். முதலில் இந்த பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வினை காண வேண்டும்.

கடந்த நான்கரை ஆண்டுகளாக அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பல்வேறு வரப்பிரசாதங்களை பெற்றுக் கொண்டனர்.

அவர்களின் பிள்ளைகள் வெளிநாடுகளில் படிக்கின்றார்கள். ஆனால் அவர்களுக்கு வாக்களித்த தமிழ் மக்கள் எந்த நன்மைகளினையும் பெற்றுக் கொள்ளவில்லை.

யாழ்ப்பாணத்தில் உள்ள அரச அலுவலகங்களில் தமிழர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. குறிப்பாக வடக்கிலுள்ள வைத்தியசாலைகளில் முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவின் ஆதரவாளர்களே வேலை செய்கின்றனர்.

கடந்த அரசாங்கம் அமைச்சரவையில் அமைச்சரவை பத்திரங்களை மாத்திரமே தாக்கல் செய்திருந்தது” என்றார்.

இதையும் தவறாமல் படிங்க
சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

ஸ்ரீலங்கா பொதுத் தேர்தலில் நடைபெற்ற ஐந்து சுவாரஸ்யமான சம்பவங்கள் - வெறும் 3000 வாக்குகளால் தெரிவான எம்.பி

ஸ்ரீலங்கா பொதுத் தேர்தலில் நடைபெற்ற ஐந்து சுவாரஸ்யமான சம்பவங்கள் - வெறும் 3000 வாக்குகளால் தெரிவான எம்.பி