யாழ்ப்பாண நகர மத்தியில் திடீரென தோன்றிய பௌத்த கொடி!

283shares

யாழ்ப்பாணம் நகர மத்தியில் பௌத்த கொடி ஒன்று அடையாளம் தெரியாதவர்களால் நடப்பட்டு மலர் சூட்டப்பட்டுள்ளது.

யாழ்.மத்திய பேருந்து நிலையம் முன்பாக வீதியின் நடுவே கற்கள் மற்றும் இரும்பு குழாய்கள் கொண்டு வந்து போடப்பட்டு அதன் மீது பௌத்த கொடி ஒன்று நடப்பட்டு மலர் சூட்டப்பட்டுள்ளது.

இது நேற்று நள்ளிரவு நிறுவப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் வ. பார்த்தீபன்,

“சிங்கள பௌத்த பேரினவாதம் எமது பூர்வீக நிலங்களை மெல்ல மெல்ல விழுங்க முயற்சிக்கின்றது. அதனை நாம் தமிழ்த்தேசமாக ஒன்று திரண்டு நிறுத்த வேண்டும்.

நாம் என்ன வகையான ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்று எம்முடைய எதிரியே தீர்மானிக்கின்றான் என்கின்ற மாவோவின் கருத்துப்படி. சிங்கள பௌத்த பேரினவாதம் எங்களுடைய தமிழ் தேசத்து நிலங்களினை இவ்வகையான சின்னங்களை நிறுவி மெல்ல மெல்ல பௌத்த மயமாக்கலுக்கு உட்படுத்தி பறித்தெடுகின்ற முயற்சியாகும்.

இவ்வாறான செயற்பாடுகள் தொடருமாயின் நாம் எமது மிகவும் தொன்மையான தமிழ் வரலாற்றினை அதன் பெருமைகளை எடுத்து கூறுகின்ற நினைவுச் சின்னங்களை எமது தாயக மண்ணை பறிபோதலை தடுக்கும் நோக்குடன் எமது பிரதேசங்கள் எங்கும் நிறுவும் நிலை ஏற்படலாம் என்பதனையும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

ஏனெனில் சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு எவ்வாறு எங்கள் நிலங்களை பறித்தெடுகின்ற இன விகிதாசாரத்தை மாற்றியமைக்கின்ற பௌத்த மயமாக்கலுக்கு உட்படுத்த அக்கறை இருக்கின்றதோ, அதே அக்கறை எமது தாயகப் பிரதேசங்கள் பறிபோகமல் தடுப்பதில் எமக்கு இருக்கின்றது” என்றார்.

Tags : #Jaffna #People
இதையும் தவறாமல் படிங்க
பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்

பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்

விமான நிலையம் திறப்பு தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்

விமான நிலையம் திறப்பு தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்

இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்