முரண்டு பிடிக்கும் கோட்டாபய அரசு -முக்கிய பேச்சில் ஈடுபட்ட அமெரிக்கப் பிரதிநிதி

275shares

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானத்தை நடைமுறைப்படுத்த முடியாது என கோட்டாபய அரசாங்கம் முரண்டு பிடித்துவரும் நிலையில் இலங்கை வந்துள்ள அமெரிக்காவின் முக்கிய பிரதிநிதி இது தொடர்பாக இன்றையதினம் தமிழ்தேசிய கூட்டமைப்புடன் முக்கிய பேச்சுக்களை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளரும் தேசிய பாதுகாப்பு சபையின் இயக்குநருமான அலிஸ் வெல்ஸ், இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சந்தித்துக் கலந்துரையாடினார்.

கொழும்பில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஜ.நா. மனித உரிமைகள் சபையின் 40ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் பெப்ரவரி 25 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகின்றது. மார்ச் 22ஆம் திகதி வரை அது நடைபெறுகின்றது. அதில் மார்ச் 20ஆம் திகதி இலங்கை தொடர்பில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பரிசீலனைக்கு வரவிருக்கின்றது.

இந்தநிலையில், ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட இந்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதிலிருந்து இலங்கையின் தற்போதைய கோட்டாபய அரசு ஒரு தலைப்பட்சமாக விலகினால் எவ்வாறான மாற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பிரிட்டன் பிரதமரின் விசேட பிரதிநிதி கரேத் பெய்லி நேற்று ஆராய்ந்திருந்தார். அதன் தொடர்ச்சியாக அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளரும் தேசிய பாதுகாப்பு சபையின் இயக்குநருமான அலிஸ் வெல்ஸும் ஐ.நா. தீர்மான விவகாரம் தொடர்பில் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசியுள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
உலகம் கொரோனாவால் திணறுகிறது- வட கொரியாவிற்குள் நடக்கும் மர்மம் என்ன? மீண்டும் ஒரு அதிரடியை நிகழ்த்திய கிம் ஜான்

உலகம் கொரோனாவால் திணறுகிறது- வட கொரியாவிற்குள் நடக்கும் மர்மம் என்ன? மீண்டும் ஒரு அதிரடியை நிகழ்த்திய கிம் ஜான்

உலக வல்லரசுகளையே ஆட்டம் காண வைத்துள்ள கொரோனா! ஸ்ரீலங்கா அரசின் புதிய திட்டம் வெற்றி

உலக வல்லரசுகளையே ஆட்டம் காண வைத்துள்ள கொரோனா! ஸ்ரீலங்கா அரசின் புதிய திட்டம் வெற்றி

கொரோனாவின் பிடியிலிருந்து முழுமையாக குணமடைந்தார் கனடா பிரதமரின் மனைவி!!

கொரோனாவின் பிடியிலிருந்து முழுமையாக குணமடைந்தார் கனடா பிரதமரின் மனைவி!!