தமிழ் ஊடகங்களிடம் மகிந்த விடுத்துள்ள விசேட கோரிக்கை

349shares

தமிழ் மக்களுக்கும் தமது அரசாங்கத்திற்கும் இடையிலான நெருக்கத்தை இல்லாதொழிக்கும் செயற்பாடுகளை தமிழ் ஊடகங்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ஸ்ரீலங்கா பிரதமர் மஹிந்த ராஜபக்ச, நாட்டின் எதிர்காலத்திற்கு இவ்வாறான செயற்பாடுகள் ஆரோக்கியமாக இருக்காது என்றும் தெரிவித்துள்ளார்.

தமது அரசாங்கத்திற்கு தமிழ் மக்கள் தமக்கு ஆதரவு வழங்கினாலும், வழங்காவிட்டாலும் அரசாங்கம் என்ற ரீதியில் தமிழ் மக்களுக்கான தேவைகள் நிறைவேற்றப்படும் என்றும் ஸ்ரீலங்கா பிரதமர் உறுதியளித்துள்ளார்.

தமிழ் ஊடகங்களின் செய்தி ஆசிரியர்கள் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு இடையில் சந்திப்பொன்று இன்றைய தினம் அலரி மாளிகையில் இடம்பெற்றது.

இதில் கொழும்பை மையப்படுத்தி இயங்கும் தமிழ் ஊடகங்களின் ஆசிரியர்கள், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது தமிழ் ஊடகங்கள் தொடர்பில் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்திய பிரதமர் மஹிந்த ராஜபக்ச, பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

“தமிழ் ஊடகங்களின் செயற்பாடுகளை அவதானிக்கையில் தொடர்ந்தும் அரசாங்கத்திற்கு எதிரான விடயங்களே தலைப்புச் செய்திகளாக இருந்துவருகின்றன. மக்களையும், அரசாங்கத்தையும் பிரிக்க வேண்டாம்.

தமிழ் மக்களையும், அரசாங்கத்தையும் பிரிப்பதைவிடுத்து இணைக்க வேண்டும். அரசியல் ரீதியாக அல்ல. நாடு என்ற ரீதியில் இந்த நடவடிக்கைகள் நல்லதல்ல.

நேற்று ஒரு தலைப்புச் செய்தியில் வடக்கு மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு இந்தியாவிடமே காணப்படுகின்றது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறான செய்திகள் மூலம் மக்களின் எண்ணம் எவ்வாறு மாற்றியமைக்கப்படுகின்றது என்பதை அவதானிக்க வேண்டும். கடந்த காலங்களில் அவ்வாறு மக்களின் மனதில் எண்ணங்கள் விதைக்கப்பட்டன. இதனை தொடர்ந்து செய்வது தவறு. அந்த நிலைப்பாட்டிலேயே நாம் இருக்கின்றோம்.

ஆகவே இந்த நாட்டில் வாழும் அனைத்து தமிழ் மக்களினதும் பிரச்சினைகளுக்கான தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டிய பொறுப்பு எமக்கு காணப்படுகின்றது.

அரசாங்கம் என்ற வகையில் எமக்கு வாக்களித்தாலும் வாக்களிக்காவிட்டாலும் நாம் அதனை செய்வோம். அது எமது கடமை”.

அதேவேளை தமிழ் மக்களின் தேசியப் பிரச்சனையான இனப் பிரச்சினைக்குத் தீர்வாக தான் ஜனாதிபதியாக இருந்த போது முன்வைத்த '13 பிளஸ்" என்ற நிலைப்பாட்டில் தான் தொடர்ந்து இருப்பதாகவும் அவர் கூறினார்.

இதையும் தவறாமல் படிங்க
இங்கிலாந்து பிரதமர் விடுத்துள்ள எச்சரிக்கை - ஊரடங்கை அமுல்படுத்தவும் திட்டம்

இங்கிலாந்து பிரதமர் விடுத்துள்ள எச்சரிக்கை - ஊரடங்கை அமுல்படுத்தவும் திட்டம்

உயிர்த்தஞாயிறு தாக்குதல் -மைத்திரியின் பேரம் அம்பலம்

உயிர்த்தஞாயிறு தாக்குதல் -மைத்திரியின் பேரம் அம்பலம்

வெளியேறிய  ரணில் மற்றும் சுமந்திரன்!

வெளியேறிய ரணில் மற்றும் சுமந்திரன்!