பாடசாலை அதிபரை மாற்றக்கோரி கிளர்ந்தெழுந்த மக்கள்

57shares

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் முல்லை கல்வி வலயத்தின் கீழ் உள்ள வேணாவில் சிறீ முருகானந்தா வித்தியாலய பாடசாலையின் அதிபரை மாற்றம் செய்து தருமாறு பாடசாலை அபிவிருத்தி சங்கம்,பழையமாணவர்கள்,பெற்றோர்கள், கிராம பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து இன்று ( 14.01.2020)கவனயீர்ப்பு நடவடிக்கை ஒன்றினை முன்னெடுத்தனர்.

இன்று காலை 7.00 மணி தொடக்கம் 9.00 மணிவரை இந்த கவனயீர்ப்பு போராட்டம் பாடசாலை முன்றலில் நடைபெற்றது.

கடந்த பத்து ஆண்டுகளாக ஒரே அதிபர் காணப்படுவதாகவும் இதனால் அதிபரின் துர்செயற்பாடுகள் காரணமாக பாடசாலையில் புதிதாக இணையும் மாணவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவாக காணப்படுகின்றது அத்துடன் கல்வி கற்கும் மாணவர்கள் கல்வியிலும்,விளையாட்டிலும்,மற்றும் அனைத்து துறைகளிலும் குன்றிக்கொண்டு செல்வதை அவதானிக்க முடிந்துள்ள நிலையினை கருத்தில் கொண்டு அதிபரை மாற்றி தருமாறு பல தடவைகள் கோரிக்கை விடுத்த நிலையில் இன்று கவனயீர்ப்பு நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளார்கள்.

பாடசாலை அதிபர் பாடசாலையில் மதுபாவிப்பதாக குற்றம் சுமத்திய மக்கள் குறிப்பாக இந்த பகுதி மக்கள் மலையக வம்சாவழியினை சேர்ந்தவர்கள் இந்த மக்களைதரக் குறைவான சொல்லை பாவித்து அதிபர் கீழ்த்தரமாக பேசியுள்ளாதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது தொடர்பில் பல தடவைகள் வலயக்கல்விப் பணிமனைக்கு தெரியப்படுத்தியும் அவர்கள் உரிய நடவடிக்கைகள் எதனையும் எடுக்காதமையினாலேயே தாம் போராட்டத்தில் ஈடுபடவேண்டிய தேவை ஏற்பட்டதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

அதேவேளை பாடசாலையின் அதிபர் உடனடியாக மாற்றப்படவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள், பதாதகைளைத் தாங்கியவாறும், பல கோசங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாடசாலை மாணவர்கள் கவனயீர்ப்பு செய்யும் போது ஆசிரியர் ஒருவர் மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட அனைவரையும் ஒளிப்படம் எடுத்து அச்சுறுத்தும் பாணியில் செயற்பட்டார் .

பெற்றோர்கள்,பழைய மாணவர்கள்,பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து ஜனாதிபதிக்கான மனு ஒன்றினை முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் ச.கனகரத்தினம் அவர்களின் செயலாளரிடம் கையளித்தனர்.

இந்நிலையில் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஐ.பி.அமரசிங்க தலையீட்டினை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு முல்லை வலயக்கல்வி பணிப்பாளர் உமாநிதி புவனராஜா வரவழைக்கப்பட்டு பாடசாலையில் இந்த அதிபர் இனி பணி செய்யமாட்டார் என வழங்கப்பட்ட வாக்குறுதியினை தொடர்ந்து கவனயீர்ப்ப்பாளர்கள் கலைந்து சென்றதுடன் மாணவர்களும் பாடசாலை சென்றனர்.

மேலும் இந்த ஆர்ப்பாட்டதில் பாடசாலை மாணவர்கள், பெற்றோர்களுடன், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், புதுக்குடியிருப்பு பிரதேசசபையின் பிரதித் தவிசாளர் கனகசுந்தரசுவாமி ஜனமேஜயந், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன், என பலரும் கலந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
இங்கிலாந்து பிரதமர் விடுத்துள்ள எச்சரிக்கை - ஊரடங்கை அமுல்படுத்தவும் திட்டம்

இங்கிலாந்து பிரதமர் விடுத்துள்ள எச்சரிக்கை - ஊரடங்கை அமுல்படுத்தவும் திட்டம்

உயிர்த்தஞாயிறு தாக்குதல் -மைத்திரியின் பேரம் அம்பலம்

உயிர்த்தஞாயிறு தாக்குதல் -மைத்திரியின் பேரம் அம்பலம்

நான் ஒருபோதும் அப்படி கூறவே இல்லை -பல்டியடித்தாரா அமைச்சர்?

நான் ஒருபோதும் அப்படி கூறவே இல்லை -பல்டியடித்தாரா அமைச்சர்?