முல்லைத்தீவு செம்மலை பிள்ளையார் ஆலயத்தில் சிறப்புற நடைபெற்ற தமிழர் திருநாள்

19shares

பௌத்த பிக்குவால் ஆக்கிரமிக்கப்பட்டு விகாரை அமைக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் 2020 ஆம் ஆண்டுக்கான தமிழர் திருநாள் பொங்கல் உற்சவம் இன்றைய தினம் (14) சிறப்பாக இடம்பெற்றது.

இன்று காலை முதல் சிறப்பு பூஜைகள் இடம்பெற்று மதியம் அபிஷேகம் இடம்பெற்று அடியவர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

இந்த பொங்கல் நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம் பல நூற்றுக்கணக்கான பொலிசார் ஆலய சூழலில் நிறுத்தப்பட்டிருந்த தோடு பொலிஸார் மற்றும் அரச புலனாய்வாளர்கள் ஆலயத்திற்கு வழிபாட்டுக்காக வந்த மக்களையும் பூசாரி மற்றும் ஆலய நிர்வாகத்தினரின் புகைப்படம் எடுத்தனர்.

ஆட்சி மாற்றத்தின் பின்னர் நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெறுகின்ற முதலாவது பெரிய நிகழ்வாக இந்த பொங்கல் இடம்பெற்றிருந்தது அத்தோடு நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து அங்கு இருந்த பௌத்த பிக்கு இறந்த பின்னர் இடம்பெறுகின்ற நிகழ்வாகவும் இது அமைந்திருந்தது.

அளவுக்கதிகமான பொலிசார் மற்றும் இராணுவ புலனாய்வாளர்களின் கண்காணிப்பை தவிர எந்தவிதமான இடையூறுகளும் இன்றி பொங்கல் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.

இந்தப் பொங்கல் நிகழ்வில் செம்மலை கிராம மக்கள் பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் லோகேஸ்வரன் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.

கடந்த வருடம் இதே நாள் தமிழர் திருநாள் பொங்கல் உற்சவம் நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் இடம் பெற்றிருந்த நேரம் அங்கு வந்த பௌத்த பிக்குகளும் தென்பகுதியில் இருந்து வந்த சிங்கள மக்களாலும் இடையூறுகள் பல ஏற்படுத்தப்பட்ட இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!