பசில் மற்றும் கோட்டாபய நன்கு அறிவார்கள்! தீர்க்கமான முடிவு எடுக்கப்படவேண்டும்

28shares

பசில் ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ இவரும் சுதந்திர கட்சியின் முக்கியத்துவம் பற்றி நன்கு அறிவார்கள். எனவே எதிர்வரும் பொதுத்தேர்தலில் பொதுவான சின்னம் தொடர்பில் தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டுமென என சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

சுதந்திர கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் பொதுஜன பெரமுன உள்ளிட்ட கட்சிகள் இணைந்த பரந்துபட்ட கூட்டணிக்கான சின்னம் தொடர்பில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர் தீர்க்கமான முடிவொன்றை எடுப்பர்

பொதுஜன பெரமுன கூறுவதைப் போன்று கூட்டணியில் மொட்டுச் சின்னத்தில் போட்டியிட்டால் அந்த கட்சிக்கான தனித்துவமான சின்னம் அற்றுப் போகும். இதனால் சுதந்திர கட்சிக்கு எவ்வித பாதிப்பும் இல்லை.

காரணம் சுதந்திர கட்சி ஏனைய கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அமைத்த சந்தர்ப்பங்களில் கட்சியின் சின்னத்தைப் பாதுகாக்கும் நோக்கில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு என்ற பெயரில் வெற்றிலை அல்லது கதிரை சின்னத்திலேயே போட்டியிட்டது. எனவே நாம் சின்னம் தொடர்பில் அலட்டிக் கொள்ளப் போவதில்லை என மேலும் தெரிவித்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
யாழ் மாவட்டத்தின் முக்கிய தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகின! முன்னிலையில் யார்?

யாழ் மாவட்டத்தின் முக்கிய தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகின! முன்னிலையில் யார்?

ஸ்ரீலங்கா தேர்தலில் இதுவரையான முடிவுகளின் விபரம்! முன்னிலையில் யார்? தமிழர் தரப்பின் நிலை?

ஸ்ரீலங்கா தேர்தலில் இதுவரையான முடிவுகளின் விபரம்! முன்னிலையில் யார்? தமிழர் தரப்பின் நிலை?

வெற்றிக்கொண்டாட்டத்தில் மஹிந்த! நாமல் வெளியிட்ட புகைப்படம்

வெற்றிக்கொண்டாட்டத்தில் மஹிந்த! நாமல் வெளியிட்ட புகைப்படம்