கோட்டாபய ஜனாதிபதியானதன் பின்னர் ஏற்பட்டுள்ள கடும் ஆபத்து! சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம்

30shares

ஸ்ரீலங்காவின் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச பதவியேற்ற பின்னர் இலங்கையில் மனித உரிமைகளிற்கு கடும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டுக்கான சர்வதேச மனித உரிமை நிலவரம் தொடர்பில் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் தென்னாசியாவிற்கான இயக்குநர் மீனாக்சி கங்குலி கருத்து வெளியிடுகையில்,

“இலங்கை கடந்த சில வருடங்களில் அடிப்படை உரிமைகளை மீள ஏற்படுத்துவது ஜனநாயக ஸ்தாபனங்களை மீள கட்டியெழுப்புவதில் உருவாக்கிய முன்னேற்றங்கள் பழிவாங்கல்களுடன் இல்லாமல் செய்யப்படலாம். நிலவுகின்ற அச்சத்திற்கு உரிய காரணங்கள் உள்ளன.

புதிய ஜனாதிபதி கடந்த கால துஸ்பிரயோகங்களை துடைத்தெறியும் நோக்கத்துடன் உள்ளதுடன் எதிர்கால துஸ்பிரயோகங்களிற்கான வழியை ஏற்படுத்த முனைகின்றார்.

சர்வதேச குற்றங்களை மூடி மறைக்க முடியாது என்பதை கரிசனையுள்ள அரசாங்கங்கள் தெரியப்படுத்தவேண்டும்.

2009 இல் முடிவிற்கு வந்த இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகளிற்கும் இடையிலான உள்நாட்டு யுத்தத்தின் போது இடம்பெற்ற துஸ்பிரயோகங்களிற்கு தீர்வை காண்பதில் முன்னைய மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தில் சிறிதளவு முன்னேற்றம் காணப்பட்டது.

இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு வாக்குறுதிகள் சிலவற்றை அளித்ததுடன் நிலங்களை மீள கையளிப்பது, காணாமல்போனோர் அலுவலகத்தை அமைப்பது போன்ற விடயங்களை முன்னெடுத்தது.

எனினும் இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்ற தவறியுள்ளதுடன், சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய பொறிமுறையை உருவாக்க தவறியுள்ளது.

புதிய ராஜபக்ச அரசாங்கம் இந்த வாக்குறுதிகளை தான் மதிக்கப்போவதில்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
யாழ் மாவட்டத்தின் முக்கிய தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகின! முன்னிலையில் யார்?

யாழ் மாவட்டத்தின் முக்கிய தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகின! முன்னிலையில் யார்?

ஸ்ரீலங்கா தேர்தலில் இதுவரையான முடிவுகளின் விபரம்! முன்னிலையில் யார்? தமிழர் தரப்பின் நிலை?

ஸ்ரீலங்கா தேர்தலில் இதுவரையான முடிவுகளின் விபரம்! முன்னிலையில் யார்? தமிழர் தரப்பின் நிலை?

வெற்றிக்கொண்டாட்டத்தில் மஹிந்த! நாமல் வெளியிட்ட புகைப்படம்

வெற்றிக்கொண்டாட்டத்தில் மஹிந்த! நாமல் வெளியிட்ட புகைப்படம்