ஸ்ரீலங்கா அரசாங்கத்திடம் விடுக்கப்பட்டுள்ள மிக முக்கிய கோரிக்கை

40shares

காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் சட்டத்தை மீள்பரிசீலிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர், தமது உறவுகளை தேடும் குடும்பங்களிற்கு உள்ள உரிமையையும் நினைவிற்கொள்ள வேண்டும் என காணாமல் போன அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் தவிசாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான சாலிய பீரிஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“2016ம் ஆண்டின் 14ம் இலக்க காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (தாபித்தலும், நிர்வகித்தலும் பணிகளை நிறைவேற்றலும்) சட்டத்தை அரசாங்கம் மீள்பரிசீலிக்க முயற்சி எடுக்கவுள்ளதென சமீபத்திய ஊடக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகமானது அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நீதி மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோருடன் 09 ஜனவரி 2020 ஆம் திகதியிடப்பட்ட கடிதங்களின் மூலம் உத்தியோகபூர்வமாக தொடர்புகொண்டது.

அரசாங்கத்துடனான தனது தொடர்புகளில் காணாமல் போனோர் அலுவலகமானது, காணாமல் போன மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரினது குடும்பங்களின் நீண்டகால கோரிக்கைகளின் அங்கீகாரமாகவும், காணாமல் போனோர் மற்றும் காணாமலாக்கப்பட்டோருடன் தொடர்புடைய பிரச்சினைகளை வெளிப்படுத்துவதில் கடந்த அரசாங்கங்கள் பொறிமுறைகளில் கண்ட தோல்விகளையும் பரிந்துரைகளையும் வெளிப்படுத்துவதற்குமாகவே காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் தாபிக்கப்பட்டது என மேற்கோளிட்டு காட்டியுள்ளது.

சிவில் யுத்தம் மற்றும் தெற்குப் பகுதி கிளர்ச்சிகள் உள்ளடங்களாக பல்வேறு காரணிகளினால் கடந்த நான்கு தசாப்தங்களாக பரவலான காணாமல் போதல்களினால் இலங்கையானது பெரும் வேதனைக்குள்ளாகியுள்ளது என்பதையும் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் மீள நினைவூட்டியது.

2011ம் ஆண்டிலான கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை போன்ற முன்னைய பொறிமுறைகள் என்பவை காணாமல் போன மற்றும் காணாமலாக்கப்பட்டவர்களுடன் தொடர்புடைய பிரச்சினைகளை விசாரிக்க பரந்த பணிப்பாணை மற்றும் வலுவான விசாரணை தத்துவங்களுடன் கூடிய நிரந்தரமானதொரு விசாரணை ஆணைக்குழுவை அமைக்க பரிந்துரைத்துள்ளன என்பதையும் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

எந்தவொரு திருத்தமும் நாடாளுமன்றினாலேயே இயற்றப்படவேண்டுமெனினும் சட்டத்திற்கு திருத்தங்களை பிரேரிப்பது அரசாங்கத்தின் தனியுரிமை என்பதை நாம் ஏற்றுக்கொள்கிறோம்.

காணாமல் போனோர் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரது குடும்பங்கள் மற்றும் அத்தகைய குடும்பங்களுடனும் காணாமல் போனோர் அலுவலகத்துடனும் பணியாற்றும் நிறுவனங்களினதும் பரந்த ஆலோசனைகளைப் பின்பற்றியதாகவே பிரேரிக்கப்படவுள்ள சட்டத்திற்கான திருத்தங்கள் அமைந்திருக்க வேண்டுமென காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் நம்புகிறது.

அவ்வாறு செய்யும் பொழுது காணாமல் போன அல்லது காணாமல் ஆக்கப்பட்ட தனது அன்புக்குரியவர்களின் நிலை என்னவென்பதை தெரிந்துக்கொள்ள அக்குடும்பங்களிற்கு உள்ள உரிமையையும் குடும்பங்களின் தேவைகளையும் மனம் கொள்ளுதல் அவசியமாகுமெனவும் கருதுகின்றது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
அமெரிக்க அதிபராக பதவியேற்றவுடன் முதல் மகிழ்ச்சிக்குரிய செய்தியை வெளிப்படுத்திய பைடன்! புலம்பெயர்ந்தவர்களுக்கு நல்ல செய்தி

அமெரிக்க அதிபராக பதவியேற்றவுடன் முதல் மகிழ்ச்சிக்குரிய செய்தியை வெளிப்படுத்திய பைடன்! புலம்பெயர்ந்தவர்களுக்கு நல்ல செய்தி

விமான நிலையம் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே தரையிறங்கவுள்ள 15 விமானங்கள்! விபரம் வெளியானது

விமான நிலையம் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே தரையிறங்கவுள்ள 15 விமானங்கள்! விபரம் வெளியானது

மரணித்த அனைவரின் குடும்பத்தினருக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளது - இலங்கை அரசாங்கத்திற்கு வந்த முக்கிய தகவல்

மரணித்த அனைவரின் குடும்பத்தினருக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளது - இலங்கை அரசாங்கத்திற்கு வந்த முக்கிய தகவல்