வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தி கொடுக்கும் வரை நான் அமைதியாக இருக்க மாட்டேன். பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துவோம் என கூறுக்கொண்டு திரிகின்றவர்களுக்கு நான் செருப்பால் தான் பதில் சொல்வேன் என கல்முனை ஸ்ரீ சுபத்திரராம விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர் தெரிவித்தார்.
கல்முனை பிராந்திய தமிழ் இளைஞர் சேனையின் ஏற்பாட்டில் கல்முனை மாநகரில் தைத்திருநாள் பொங்கல் விழா புதன்கிழமை (15) கல்முனை பழைய பேருந்து நிலைய முன்றலில் தமிழ் இளைஞர் சேனை தலைவர் ந . சங்கத் தலைமையில் நடைபெற்ற போது மேற்கண்டவாறு தனதுரையில் குறிப்பிட்டார்.
இதன்போது பேசிய அவர்,
இந்த நாட்டில் தமிழர்களுக்கும் உரிமை உண்டு சிலர் நினைக்கின்றனர், தமிழ் மக்களை இந்தியாவில் இருப்பவர்கள் காப்பாற்ற வேண்டும் என்று. இந்த மண்ணில் பிறந்த அத்தனை மக்களுக்கும் அதிகாரம் இருக்கிறது. இந்த நாட்டில் சிங்களவர்களுக்கு மாத்திரம் தான் அதிகாரம் இருக்கிறது, கௌரவம் இருக்கிறது, என்பதை நீங்கள் சிறிதளவும் எண்ணக்கூடாது தமிழ் மக்களுக்கும் அதிகாரம் உள்ளது.
அப்பாவி தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று தமிழர்களின் பிரதிநிதிகளாக நாடாளுமன்றம் சென்றவர்கள் வெறுமனே குரல் கொடுப்பதாக நடிக்கின்றனர். அதைத் தவிர தமிழ் மக்கள் பற்றி எவருக்கும் கவலை படுவதில்லை மாறாக அவர்கள் சுகபோக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். நான் தமிழ் மக்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன், நீங்கள் தான் அதிகாரம் மிக்கவர்கள். நீங்கள் தான் அவர்களை தெரிவு செய்து நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைக்கிறீர்கள்.
ஆனால் தமிழ் மக்களுக்கு சில பௌத்த துறவிகளை கண்டால் பயம் அவர்கள் பயங்கரமானவர்கள், அவர் வந்தால் பயங்கரமான வேளைகளில் தான் செய்வார்கள். அப்படி இல்லை நாங்களும் உங்களைப் போன்ற சாதாரண மனிதர்கள் தமிழ் மக்கள் சங்கரத்ன தேரர் ஆகிய எண்ணெய் நம்புகின்றனர். நான்தான் தமிழ் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். கல்முனை பிரதேச செயலகத்தை தரம் உயர்த்திக் கொடுக்கும் வரை தமிழ் மக்களோடு தோள்கொடுத்து நிற்பேன்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து மக்களின் வாக்குகளை பெற கல்முனைப் பிரதேசத்திற்கு யார் வந்தாலும் நான் எதிர்த்து நிற்பேன். என்று பலர் நாங்கள் தான் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துவோம் என கூறுக்கொண்டு திரிகின்றனர். அவர்களுக்கு நான் செருப்பால் தான் பதில் சொல்வேன்” என்றார்.