நடிகர் ரஜினி இலங்கை வர அனுமதி மறுத்தது கோட்டாபய அரசு?

511shares

நடிகர் ரஜினிகாந்த் இலங்கை வருவதற்கு கோட்டாபய அரசாங்கம் விசா வழங்க மறுப்பு தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகமொன்று பரபரப்பு பதகவலை தெரிவித்துள்ளது.

அண்மையில் தமிழகத்ததுக்கு சென்றிருந்த வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் நடிகர் ரஜினிகாந்தை சநதித்து பேச்சு நடத்தியிருந்தார்.

.இந்த சந்திப்பில் ரஜினியின் அரசியல் திட்டங்கள் குறித்து விக்னேஷ்வரன் கேட்டறிந்தார். மேலும் இந்தியாவில் நடக்கும் அரசியல் மாற்றங்கள், தமிழர்கள் பிரச்சனை, திரைப்பயணம் குறித்தும் பேசினார்கள்.

அதேபோல் இலங்கை வருமாறும், அங்கிருக்கும் தமிழ் மக்களை சந்திக்குமாறும். அரசியல் ரீதியான கூட்டங்களில் அங்கு கலந்து கொள்ள வேண்டும் என்றும் ரஜினிக்கு விக்னேஷ்வரன் அழைப்பு விடுத்தார்.

இந்த நிலையில் தற்போது நடிகர் ரஜினிகாந்துக்கு விசா வழங்க இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

அதன்படி யாழ்ப்பாணத்திற்கு வருகை தர உள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு விசா வழங்க இயலாது.அவர் அரசியல் நடவடிக்கைகாக இலங்கை வருகிறார்.

அவர் மக்களை சந்திக்க வாய்ப்புள்ளது. அரசியல் திட்டங்களை செயல்படுத்த இலங்கை அரசு எப்போதும் விசா வழங்காது. இதனால் ரஜினிக்கும் விசா வழங்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதையும் தவறாமல் படிங்க
loading...