மானமுள்ள தமிழன் அப்படி சொல்லியிருக்கவே மாட்டான்!

120shares

தமிழ் மக்களுக்கு முக்கியமானவை சோறும் தண்ணீரும் தான் என அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்த கருத்து, முழு தமிழினத்தையும் கொச்சைப்படுத்துவதாக அமைந்துள்ளதாக வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் விசனம் வெளியிட்டுள்ளார்.

இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள தமது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேவின் கருத்துக்கு பதில் வழங்கும் போதே சீ.வி.கே.சிவஞானம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடந்த 14 ஆம் திகதி அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே இவ்வாறு கூறியதாக சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் கடந்த 70 வருடங்களாக சோற்றுக்கும், தண்ணீருக்கும் போராடவில்லை எனவும், அரசாங்கத்தின் பொருளாதார தடை இருந்த காலத்திலும் இந்த மண்ணில் வாழ்ந்தவர்கள் எனவும் சீ.வி.கே.சிவஞானம் மேலும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான கருத்தை கூறிய மகிந்தானந்த அளுத்கமகேவை சந்தித்தவர்கள் சிலவேளை பிச்சைக்காரர்களாக இருக்கலாம் என தெரிவித்த சீ.வி.கே.சிவஞானம்,ஒரு மானமுள்ள தமிழன் எந்த கட்சியில் இருந்தாலும் இதனை சொல்லியிருக்க மாட்டான் எனவும் தெரிவித்துள்ளார்.


இதையும் தவறாமல் படிங்க
இங்கிலாந்து பிரதமர் விடுத்துள்ள எச்சரிக்கை - ஊரடங்கை அமுல்படுத்தவும் திட்டம்

இங்கிலாந்து பிரதமர் விடுத்துள்ள எச்சரிக்கை - ஊரடங்கை அமுல்படுத்தவும் திட்டம்

உயிர்த்தஞாயிறு தாக்குதல் -மைத்திரியின் பேரம் அம்பலம்

உயிர்த்தஞாயிறு தாக்குதல் -மைத்திரியின் பேரம் அம்பலம்

வெளியேறிய  ரணில் மற்றும் சுமந்திரன்!

வெளியேறிய ரணில் மற்றும் சுமந்திரன்!