இருப்பவர்கள் இருந்திருந்தால் இப்படி நடக்குமா...? கிளிநொச்சியில் போர்க்கொடி தூக்கிய மக்கள்!

213shares

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் கிராம மக்கள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

தங்களது கிராமத்தில் இடம்பெற்று வருகின்ற சமூக சீரழிவுச் செயற்பாடுகளால் கிராமத்தின் கௌரவம் பாதிக்கப்படுவதோடு, இளைஞர்கள், சிறுவர்கள் கூட பாதிக்கப்படுவதாகவும், தெரிவித்த கிராம மக்கள் தங்களின் கிராமத்தின் பெயரை கூட கூற முடியாத அளவுக்கு நிலைமை சென்றுவிட்டதும் என்றும், சட்டத்தை பாதுகாக்க வேண்டியவர்கள் இந்த விடயத்தில் அசமந்த போக்குடன் செயற்படுவதாகவும் குற்றம் சாட்டினர்.

கிராமத்தில் இடம்பெற்று வருகின்ற சமூக சீரழிவு காரணமாக ஊரில் பெண்களை திருமணம் செய்து கொடுப்பதிலிருந்து, காணிகளை விற்பனை செய்வது வரை பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகவும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் இருப்பவர்கள் இருந்திருந்தால் இப்படி நடக்குமா? ஒழுக்கமுள்ள கிராமத்தை சீரழிப்பவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுங்கள், எங்கள் ஊரை எங்களுக்க திருப்பித் தாருங்கள் போன்ற வாசங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்தனர்.


இதையும் தவறாமல் படிங்க
இங்கிலாந்து பிரதமர் விடுத்துள்ள எச்சரிக்கை - ஊரடங்கை அமுல்படுத்தவும் திட்டம்

இங்கிலாந்து பிரதமர் விடுத்துள்ள எச்சரிக்கை - ஊரடங்கை அமுல்படுத்தவும் திட்டம்

உயிர்த்தஞாயிறு தாக்குதல் -மைத்திரியின் பேரம் அம்பலம்

உயிர்த்தஞாயிறு தாக்குதல் -மைத்திரியின் பேரம் அம்பலம்

நான் ஒருபோதும் அப்படி கூறவே இல்லை -பல்டியடித்தாரா அமைச்சர்?

நான் ஒருபோதும் அப்படி கூறவே இல்லை -பல்டியடித்தாரா அமைச்சர்?