ஸ்ரீலங்காவிலிருந்து தப்பி ஓடினார் பிரபல நடிகை!

432shares

பிரபல சிங்கள நடிகை பியூமி ஹன்சமாலி ஸ்ரீலங்காவிலிருந்து வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் வீட்டினை சோதனை செய்த பொலிஸார் பல்வேறு இறுவெட்டுக்களை கைப்பற்றியதுடன், அவரின் தொலைபேசி உரையாடல்களும் சமூக வலைதளங்களில் வெளியாகியிருந்தன.

இந்நிலையில், இது தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையில், ரஞ்சனின் தொலைபேசி உரையாடல்களினால், பல நடிகர்கள் மற்றும் நடிகைகளின் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இதேவேளை, நடிகை பியூமி ஹன்சமாலியும் குறித்த குரல் பதிவு காரணமாக நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

ரஞ்சனின் வீட்டில் கைப்பற்றப்பட்ட பல இறுவட்டுக்களின் அடிப்படையில், முன்னைய ஆட்சியின்போது குற்றப்புலனாய்வு திணைக்கள முன்னாள் பணிப்பாளர் சானி அபேசேகர, நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா உள்ளிட்ட பலருடன் கலந்துரையாடிய விடயங்கள் தொடர்பான குரல் பதிவுகள் அனைத்தும் பகிரங்கமாகியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.


you may like this video

இதையும் தவறாமல் படிங்க
இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

தவறான தகவல் -ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிக்கை

தவறான தகவல் -ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிக்கை

பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்

பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்