ஸ்ரீலங்காவிற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை! கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசேட ஏற்பாடு

359shares

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைரஸ் தொற்றுக்கு உள்ளான பயணிகளை இனம் காணும் வகையில் ஸ்கேனர் இயந்திரங்களை பயன்படுத்தி பரிசோதனை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் நாளை முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில், சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் தொடர்பில் இலங்கையை உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்திருந்தது.

ஆகவே, இது தொடர்பில் விமான நிலையத்தில் மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள அவர்,

இது தொடர்பில் ஆராய்ந்ததன் பின்னர், விசேடமாக ஸ்கேனர் இயந்திரங்களை பயன்படுத்தி பரிசோதனை மேற்கொள்ளும் திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளோம். நாளை அந்தப் பரிசோதனை நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என்றார்.

இதேவேளை, சீனாவின் வுஹன் மாநிலத்தில் கண்டு பிடிக்கப்பட்ட இந்த வைரஸ் காரணமாக இதுவரை சீனாவில் 139 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மூவர் உயிரிழந்தும் உள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.


இதையும் தவறாமல் படிங்க
இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

விமான நிலையம் திறப்பு தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்

விமான நிலையம் திறப்பு தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு வெளிவந்த மகிழ்ச்சியான செய்தி

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு வெளிவந்த மகிழ்ச்சியான செய்தி