பேராபத்தாக அமைந்துவிடும்! மகிந்த - கோட்டாபயவை எச்சரித்த ரணில்

428shares

ராஜபக்ச அரசு தலைமையும், அந்த அரசில் உள்ள உறுப்பினர்களும் சர்வதேச நாடுகள் தொடர்பிலோ அல்லது ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்கள் குறித்தோ கருத்துக்களை வெளியிடும்போது மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்துரைக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,

“ஐ,நா. மனித உரிமைகள் சபையில் தற்போது இருக்கும் தீர்மானம் இலங்கையின் இணை அனுசரணையுடன்தான் நிறைவேற்றப்பட்டது.

அந்தத் தீர்மானம் எமது அரசு மீதான தீர்மானம் அல்ல. அதேபோல் ராஜபக்ச அரசு மீதான தீர்மானமும் அல்ல. அது எமது நாடு மீதான தீர்மானமே ஆகும். இதை விளங்கிக்கொள்ளாமல் ராஜபக்ச தரப்பினர் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

ராஜபக்ச அரசு தலைமையும், அந்த அரசில் உள்ள உறுப்பினர்களும் சர்வதேச நாடுகள் தொடர்பிலோ அல்லது ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்கள் குறித்தோ கருத்துக்களை வெளியிடும்போது மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.

ஐ.நாவில் மேலும் கால அவகாசம் கோருவதுடன் தீர்மானத்தையும் திருத்துவோம் என ஒரு தரப்பினரும், அந்தத் தீர்மானத்தை அடியோடு நிராகரித்துக் குப்பையில் தூக்கி வீசுவோம் என இன்னொரு தரப்பினரும், ஐ.நாவின் சவாலை நட்பு நாடுகளுடன் இணைந்து முறியடிப்போம் என மற்றொரு தரப்பினரும் என ராஜபக்ச அரசில் உள்ளவர்கள் மாறி மாறி கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்கள்.

இது நாட்டுக்குத்தான் பேராபத்தாக மாறும். எனவே, இலங்கை மீதான ஐ.நாவி ன் தீர்மானத்தை மதித்து அதனை நடைமுறைப்படுத்தும் வழிகளை இந்த அரசு பார்க்க வேண்டும்.

உலக வல்லரசு நாடுகள் கூட ஐ.நாவின் தீர்மானங்களை மதித்துத்தான் நடக்கும், அதனை உதறி எறிய எந்த நாடுகளும் முன்வருவதில்லை. ஆனால், ராஜபக்ச தரப்பினர் ஐ.நாவுடன் முட்டிமோதும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். இது எமது நாட்டுக்குத்தான் பேராபத்தாக அமையும்” என்றார்.

இதையும் தவறாமல் படிங்க
இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

விமான நிலையம் திறப்பு தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்

விமான நிலையம் திறப்பு தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்

பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்

பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்