யாழில் குடும்பமொன்று எடுத்த விபரீத முடிவால் நேர்ந்த அனர்த்தம்!

693shares

ஒரே குடும்பத்தில் தாய், அவரது மகள், மகளின் கணவர் என மூவர் நஞ்சு அருந்தி உயிரை மாய்க்க முற்பட்டுள்ளசம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவர்களில் தாயார் உயிரிழந்த நிலையில் அவரது மகளும் மருமகனும் ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தென்மராட்சி, மட்டுவில் சந்திரபுரம் வடக்கு செல்லப்பிள்ளையார் கோவிலடியில் இன்று பிற்பகல் இடம்பெற்றது என்று சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

அதே இடத்தைச் சேர்ந்த நவரத்தினம் விமலேஸ்வரி (வயது-65) என்ற தாயார் உயிரிழந்துள்ளார். அவரது மகள் சிவலக்சன் கீர்த்திகா (வயது-35), மருமகன் சிவபாலன் சிவலக்சன் (வயது-35) ஆகியோர் ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அதிக வட்டிக்கு வாங்கிய கடனால் ஏற்பபட்ட நெருக்கடி நிலை காரணமாகவே இந்த உயிர்மாய்ப்பு முயற்சி இடம்பெற்றது என்று ஆரம்ப விசாரணைகளில் தெரியவருகிறது என்று பொலிஸார் தெரிவித்தனர்.


you may like this

இதையும் தவறாமல் படிங்க
பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்

பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்

விமான நிலையம் திறப்பு தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்

விமான நிலையம் திறப்பு தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்

இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்