ரஞ்சனுடன் பேசியது உண்மையே! ஒப்புக்கொண்டார் நீதிபதி

131shares

முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் தான் உரையாடியதாக வெளியிடப்பட்ட ஒலிப்பதிவுகள் உண்மையென நீதிபதி பத்மினி ரணவக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்கவுக்கும் நீதிபதி பத்மினி ரணவக்கவுக்கும் இடையில் இடம்பெற்றதாக கூறப்படும் தொலைபேசி உரையாடல்கள், தொடர்பாக கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினர் அவரிடம் விசாரணைகளை நடத்தியிருந்தனர்.

இதன்போது தனது சொந்த தொலைபேசியிலிருந்து செய்யப்பட்ட தொலைபேசி அழைப்புகள் என பத்மினி ரணவக்க ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இதேவேளை பொலிஸ் வட்டாரங்களின்படி, அவர் ஒரு திருமணத்தில் ரஞ்சன் ராமநாயக்கவுடன் பழகியதாக ஒப்புக் கொண்டதாகவும் பின்னர் ராமநாயக்கவுடன் நெருங்கிய நட்பைப் பேணி வந்ததாகவும் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளன.

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட நீதிபதி பத்மினி ரணவக்க, தனது பதவி உயர்வு பெற உதவி கோரிய ஒலிப்பதிவு ஒன்றே இணையத்தில் வெளியிடப்பட்டு வைரலாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.


you may like this

இதையும் தவறாமல் படிங்க
இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்

பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு வெளிவந்த மகிழ்ச்சியான செய்தி

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு வெளிவந்த மகிழ்ச்சியான செய்தி