பல்கலை மாணவியை வெட்டிக் கொலை செய்த இராணுவச் சிப்பாய்! தர்ம அடி கொடுத்த இளைஞர்கள் -வெளியானது காணொளி

2380shares

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவியை வெட்டிக் கொலை செய்த இராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று பிற்பகல் பண்ணைக் கடற்கரையில் இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றது.

கொலையாளி பரந்தன் பகுதியில் உள்ள இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ சிப்பாய் என ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

கொலை செய்யப்பட்ட மாணவிக்கும் குறித்த இராணுவ சிப்பாய்க்கும் இடையில் காதல் இருந்துள்ள நிலையில் இருவரும் அந்த பகுதியில் நீண்டநேரம் உரையாடி கொண்டிருந்த நிலையில் திடீரென அவர் மாணவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார் என பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாணவியை கொலை செய்து விட்டு, கொலையாளி தப்பி சென்றபோது அப்பகுதியில் கடமையிலிருந்த விமானப்படை புலனாய்வு பிரிவினர் குறித்த கொலையாளியை துரத்தி சென்று கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

இதன்போது அவ்விடத்தில் கூடிய இளைஞர்கள் இராணுவச் சிப்பாய்க்கு தர்ம அடி கொடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான காணொளி தற்போது வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பயணம் மேற்கொள்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பயணம் மேற்கொள்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி

இன்று இரவு கொழும்பு சென்ற பேருந்தை துரத்திச் சென்று தமிழ் இளைஞனை கைது செய்த பொலிஸார்

இன்று இரவு கொழும்பு சென்ற பேருந்தை துரத்திச் சென்று தமிழ் இளைஞனை கைது செய்த பொலிஸார்

கொரோனாவின் எதிரொலி! சீன அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி முடிவு- உடனடியாக விடுக்கப்பட்டுள்ள உத்தரவு

கொரோனாவின் எதிரொலி! சீன அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி முடிவு- உடனடியாக விடுக்கப்பட்டுள்ள உத்தரவு

loading...