யாழில் இராணுவச் சிப்பாயால் கொலை செய்யப்பட்ட மாணவி தொடர்பில் வெளியான முழுவிபரம்!

1814shares

யாழ்ப்பாணத்தில் கொலை செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவி, பேருவளை பகுதியைச் சேர்ந்த எச்.டி.ஆர். காஞ்சனா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இன்று பிற்பகல் யாழ்ப்பாணம் பண்ணைக்கடற்கரையில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட மாணவியின் சடலம் பொலிஸாரினால் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் மாணவியின் முழுவிபரங்களும் வெளியாகியுள்ளன.

கொலை செய்யப்பட்ட மாணவியும், கொலை செய்த இராணுவச் சிப்பாயும் பேருவளையைச் சேர்ந்தவர்கள் என இனம்காணப்பட்டுள்ளனர்.

குறித்த மாணவி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு கற்றுவந்துள்ளார்.

கொலை செய்த இராணுவ சிப்பாய், பரந்தன் இராணுவ பொலிஸ் பிரிவின், மருத்துவ வைத்தியசாலையில் கடமையாற்றுகின்றார் என தெரியவந்துள்ளது.

கொலை செய்யப்பட்ட மாணவிக்கும் குறித்த இராணுவச் சிப்பாய்க்கும் கடந்த 4 வருடங்களிற்கு முன்னர் பதிவுத் திருமணம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கற்கும் போது வேறொருவருடன் காதல் ஏற்பட்டதால், அதை அறிந்த கணவனான இராணுவ சிப்பாய், மாணவியை அழைத்து, கத்தியால் கழுத்தை அறுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.

இதையும் தவறாமல் படிங்க
இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

தவறான தகவல் -ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிக்கை

தவறான தகவல் -ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிக்கை

பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்

பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்