இலங்கையில் முதன்முதலாக கிளிநொச்சிக்கு கிடைத்த வரப்பிரசாதம்!

688shares

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் அமைந்துள்ள பொறியியல் பீடத்தில் அமைக்கப்பட்டுள்ள இலங்கையின் முதலாவது மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் நாளையதினம் (24) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது.

இதனை இலங்கைக்கான நோர்வே தூதுவர் டிரைன் ஜெரான்லி எஸ்கெடால் திறந்து வைக்கவுள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மற்றும் பயன்பாட்டு அறிவியலுக்கான மேற்கு நோர்வே பல்கலைக்கழகம் ஆகியன கொழும்பில் உள்ள நோர்வே தூதரகத்தின் ஆதரவுடன் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் மேற்கொண்டுவந்த ஆராய்ச்சி நடவடிக்கைகளின் விளைவாக இந்த மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையத்தின் மூலம் 42 கிலோ வோற் அளவிலான மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதையும் தவறாமல் படிங்க
இங்கிலாந்து பிரதமர் விடுத்துள்ள எச்சரிக்கை - ஊரடங்கை அமுல்படுத்தவும் திட்டம்

இங்கிலாந்து பிரதமர் விடுத்துள்ள எச்சரிக்கை - ஊரடங்கை அமுல்படுத்தவும் திட்டம்

உயிர்த்தஞாயிறு தாக்குதல் -மைத்திரியின் பேரம் அம்பலம்

உயிர்த்தஞாயிறு தாக்குதல் -மைத்திரியின் பேரம் அம்பலம்

வெளியேறிய  ரணில் மற்றும் சுமந்திரன்!

வெளியேறிய ரணில் மற்றும் சுமந்திரன்!