மறிக்கப்பட்டது ஏ9 வீதி! தீர்வு இல்லாமல் நகரமாட்டோம் - போராட்ட களத்தில் இறங்கிய பொது மக்கள்

88shares

வவுனியா மடுக்கந்த தேசிய பாடசாலையில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திக்குமாறு கோரி மடுக்கந்தையை சேர்ந்த சிங்கள மக்கள் ஒன்றிணைந்து வவுனியா கல்வித்திணைக்களத்தின் முன்பாக ஏ9 வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காலை 9.30 மணிக்கு கல்வித்திணைக்களத்திற்கு முன்பாக ஒன்ணைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் திடீரென ஏ9 வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் தமது பாடசாலைக்கு உடனடியாக ஆசிரியர்களை நியமிக்கும் பட்சத்திலேயே அங்கிருந்து செல்வோம் என கோசங்களை எழுப்பினர்.

இதனால் ஏ9 வீதியில் போக்குவரத்து தடை ஏற்பட்ட நிலையில் போக்குவரத்து பொலிஸார் மாற்று வழிகளினூடாக போக்குவரத்தை சீர்செய்திருந்தனர்.

இந் நிலையில் குறித்த பகுதிக்கு வருகை தந்த பொலிஸ் அதிகாரிகள் வவுனியா தெற்கு வலயக்கல்விப்ணிப்பாளர் முத்து இராதாகிருஸ்ணனை ஆர்ப்பாட்ட இடத்திற்கு அழைத்து வந்து அம் மக்களுடன் கலந்துரையாடியிருந்தனர்.

இதன்போது தமது பாடசாலையில் 750 இற்கும் அதிகமான மாணவர்கள் கற்பதாகவும் உயர்தரத்திற்கு ஆசிரியர்கள் பற்றாக்குறையுள்ள நிலையில் அவர்கள் பெரும் சிரமங்களுக்கு முகம்கொடுப்பதாகவும் தெரிவித்ததுடன் ஏனைய வகுப்புகளுக்கும் ஆசிரியர்களை நியமிக்குமாறு கோரிக்கை முன்வைத்தனர்.

இதன்போது வலயக்கல்விப்பணிப்பாளர் இரண்டு வாரத்தில் ஆசிரியர்களை நியமிப்பதற்கு ஆவன செய்வதாக தெரிவித்த நிலையில் அவர்கள் அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை.

எனினும் எழுத்து மூலமாக தமக்கு உறுதிப்பாடு தரவேண்டும் என கேட்டதற்கு அமைய வலயக்கல்விப்பணிப்பாளரினால் எழுத்து மூலமாக இரண்டு வாரத்தில் தேசிய பாடசாலைக்கான ஆசிரியர்கள் நியமிப்பதாகவும் மற்றும் மாகாண பாடசாலைகளில் இருந்து தற்காலிகமாகவேனும் உயர்தர மாணவர்களின் நலன்கருதி ஆசிரியர்களை நியமிப்பதாக தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்த கலைந்து சென்றிருந்தனர்.


you may like this

இதையும் தவறாமல் படிங்க
இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

விமான நிலையம் திறப்பு தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்

விமான நிலையம் திறப்பு தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு வெளிவந்த மகிழ்ச்சியான செய்தி

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு வெளிவந்த மகிழ்ச்சியான செய்தி