ஓங்கி ஒலித்த குரல் அடங்கி விட்டது! மிகுந்த கவலையில் மஹிந்த

467shares

காலம் சென்ற ரஞ்சித் சொய்சா தமது தொகுதி மக்களுக்காக மட்டுமன்றி முழு நாட்டு மக்களுக்காகவும் அர்ப்பணிப்புள்ள சேவை செய்தவர் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற இரத்தினபுரி மாவட்ட எம்.பி. அமரர் ரஞ்சித் சொய்சாவுக்கான அனுதாபப் பிரேரணையில் உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர்,

அமரர் ரஞ்சித் சொய்சா பிரதேச சபை, மாகாண சபைகளில் உறுப்பினராக அமைச்சராகப் பதவி வகித்தவர். 2010ல் நாடாளுமன்றத்திற்கு பிரவேசித்த அவர், தமது மாகாண மக்களின் குரலாக ஓங்கி ஒலித்தவர்.

கடந்த அரசாங்கத்தால் மத்தள விமான நிலையத்தை நெல் களஞ்சியசாலையாக மாற்றுவதற்கு முயற்சித்தபோது அதற்கெதிராக அவர் மிகுந்த கவலையடைந்தார். அதுதொடர்பில் குரல் எழுப்பியது மட்டுமன்றி பல ஆர்ப்பாட்டங்களையும் மேற்கொண்டார்.

எப்போதும் மக்களின் பிரச்சினைகளை தமது பிரச்சினையாக கருதி அவற்றைத் தீர்ப்பதற்கு வழிவகுப்பவர். 2015ல் எமது அரசாங்கம் வீழ்ச்சி கண்டபோது எம்மோடு மிக நெருக்கமாக சேவைசெய்தவர். தொடர்ந்தும் அவர் எமது தங்கல்ல, வீரகெட்டிய வீடுகளுக்கு வந்து எம்மோடு கலந்துரையாடினார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது அவர் நோயுற்று இருந்த போதும் எம்முடன் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். அவரது பங்களிப்பு மிகவும் சிறப்பானது. அவரது இழப்பு தனக்கு மிகுந்த கவலையை தந்ததாகவும் குறிப்பிட்டார்.


you may like this

இதையும் தவறாமல் படிங்க
இங்கிலாந்து பிரதமர் விடுத்துள்ள எச்சரிக்கை - ஊரடங்கை அமுல்படுத்தவும் திட்டம்

இங்கிலாந்து பிரதமர் விடுத்துள்ள எச்சரிக்கை - ஊரடங்கை அமுல்படுத்தவும் திட்டம்

உயிர்த்தஞாயிறு தாக்குதல் -மைத்திரியின் பேரம் அம்பலம்

உயிர்த்தஞாயிறு தாக்குதல் -மைத்திரியின் பேரம் அம்பலம்

வெளியேறிய  ரணில் மற்றும் சுமந்திரன்!

வெளியேறிய ரணில் மற்றும் சுமந்திரன்!