கோட்டாபய ராஜபக்ச வழங்கியுள்ள புதிய பணிப்புரை!

54shares

தரமான ஒரு கிலோ கிராம் நெல்லை 50 ரூபாய் என்ற உத்தரவாத விலையில் கொள்வனவு செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

“நெல்லை கொள்வனவு செய்யும் இடத்திற்கு கொண்டுவரும் போது நெல் தொகையின் அதிகபட்ச ஈரப்பதம் 14 சதவீதமாக காணப்பட வேண்டும்.

அதிகபட்ச அளவு 9 சதவீதமான தரமான நிலையில் இருக்க வேண்டும். இந்த வரம்பை மீறும் நெல் தொகை 44 ரூபாவிற்கே கொள்வனவு செய்யப்படும்.

பிரதேச செயலகம் ஊடாக கொள்வனவு செய்யப்படும் நெல் தொகைக்காக குறித்த விவசாயியின் பெயரில் பெறுமதி குறிப்பிடப்பட்டு கட்டண சான்றிதழ் விநியோகிக்கப்படும்.

1 முதல் 3 ஏக்கருக்கு இடையிலான ஒரு கிலோ கிராம் நெல் தொகை 3 ஆயிரம் ரூபாயிற்கும் 3 முதல் 5 ஏக்கருக்கு ஒரு கிலோ கிராம் நெல் தொகை 5 ஆயிரம் ரூபாயிற்கும கொள்வனவு செய்யப்படும்.

இந்த முறை பெரும்போகத்தில் 20 இலட்சம் மெற்றிக் தொன் நெல் தொகையை கொள்வனவு செய்யலாம் என அரசாங்கம் எதிர்பார்ப்பதாக” குறிப்பிடப்பட்டுள்ளது.


இதையும் தவறாமல் படிங்க
இங்கிலாந்து பிரதமர் விடுத்துள்ள எச்சரிக்கை - ஊரடங்கை அமுல்படுத்தவும் திட்டம்

இங்கிலாந்து பிரதமர் விடுத்துள்ள எச்சரிக்கை - ஊரடங்கை அமுல்படுத்தவும் திட்டம்

உயிர்த்தஞாயிறு தாக்குதல் -மைத்திரியின் பேரம் அம்பலம்

உயிர்த்தஞாயிறு தாக்குதல் -மைத்திரியின் பேரம் அம்பலம்

வெளியேறிய  ரணில் மற்றும் சுமந்திரன்!

வெளியேறிய ரணில் மற்றும் சுமந்திரன்!