காணாமல் போனவர்கள் தொடர்பில் புதிய அறிவிப்பை வெளியிட்டார் கோட்டாபய!

515shares

முறையான விசாரணைகளுக்குப் பின்னரே காணாமற் போனவர்களுக்கான மரணசான்றிதழ் வழங்கப்படுமென் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தேவையான விசாரணைகளுக்குப் பிறகு, இறப்புச் சான்றிதழ் வழங்கவும், காணாமற் போனவர்களின் குடும்பங்கள் தமது வாழ்வாதாரத்தை மீளவும் கட்டியெழுப்பவும் தேவையான ஆதரவு அளிக்கப்படும் எனவும் ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

இறுதி யுத்தத்தில் காணாமல் போனவர்கள் எல்லோரும் எங்கே இருக்கிறார்கள், எப்படி வாழ்கிறார்கள் என்று யாருக்கும் தெரியாது.

இந்த நிலையில் ஐ.நா. அதிகாரி ஹானா சிங்கரை சந்தித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச காணாமற்போனவர்கள் எவரும் உயிருடன் இல்லை எனத் தெரிவித்திருந்தார்.

இது காணாமல் போனவர்களின் உறவினர்களை கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது. ஒரு ஜனாதிபதி இப்படி பேச கூடாது. காணாமல் போனவர்களை இறந்துவிட்டார்கள் என்று கூறக் கூடாது, அதிபர் எப்படி இதை உறுதியாக சொல்கிறார் என்று மக்கள் கோரிக்கை வைத்தனர்.

இந்த நிலையில், திடீர் திருப்பமாக, இறுதிப் போரில் காணாமல் போனவர்கள் குறித்து அறிந்து கொள்ள விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக ஆராய புதிய குழு அமைக்கப்படும். அவர்கள் காணாமல் போனவர்கள் குறித்து விசாரிப்பர் . மாயமானவர்கள் குறித்து தீவிர விசாரணைக்கு பிறகே முடிவு எடுக்கப்படும் . அதற்கு பிறகே அவர்களது குடும்பத்தினரிடம் இறப்பு சான்றிதழ் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


you may like this

இதையும் தவறாமல் படிங்க
இங்கிலாந்து பிரதமர் விடுத்துள்ள எச்சரிக்கை - ஊரடங்கை அமுல்படுத்தவும் திட்டம்

இங்கிலாந்து பிரதமர் விடுத்துள்ள எச்சரிக்கை - ஊரடங்கை அமுல்படுத்தவும் திட்டம்

உயிர்த்தஞாயிறு தாக்குதல் -மைத்திரியின் பேரம் அம்பலம்

உயிர்த்தஞாயிறு தாக்குதல் -மைத்திரியின் பேரம் அம்பலம்

வெளியேறிய  ரணில் மற்றும் சுமந்திரன்!

வெளியேறிய ரணில் மற்றும் சுமந்திரன்!