ஜனாதிபதியின் உத்தரவு! தயாராகின்றது பிரத்தியேக விமானம்! இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

358shares

சீனாவிலுள்ள மாணவர்களை அங்கிருந்து அழைத்து வர 50% விமானக் கட்டண தள்ளுபடியை ஶ்ரீ லங்கன் விமான சேவை அறிவித்துள்ளது.

ஶ்ரீ லங்கன் விமான சேவை விடுத்துள்ள அறிவித்தலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அறிவுறுத்தலின் பேரில் விரைவாக செயல்பட்டு, தற்போது சீனாவில் உள்ள இலங்கை மாணவர்கள் வீடு திரும்புவதற்கு ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.

பீஜிங் மற்றும் கென்டனில் இருந்து வழக்கமாக வரும் விமானங்களின் மூலம் நாடு திரும்ப விரும்பும் மாணவர்களுக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் 50% தள்ளுபடியை வழங்குவதாக ஶ்ரீலங்கன் விமான சேவை அறிவித்துள்ளது.

இது தொடர்பில் அறிந்து கொள்ள சீனாவிலுள்ள மாணவர்கள் ஶ்ரீலங்கன் விமான சேவையை தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. (+94 777771979)

அது தவிர தற்போது சீனாவில் உள்ள மாணவர்களுக்காக பிரத்தியேக விமானமொன்றை அனுப்புவதற்கு இலங்கை திட்டமிட்டுள்ள நிலையில், இது தொடர்பாக சீனா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளிலும் சிவில் விமான போக்குவரத்து மற்றும் சுகாதார அதிகாரிகள் மற்றும் இலங்கையின் வெளியுறவு அமைச்சு உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடல்கள் நடந்து வருகின்றன.


you may like this

இதையும் தவறாமல் படிங்க
பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்

பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்

இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

விமான நிலையம் திறப்பு தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்

விமான நிலையம் திறப்பு தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்