கொரோனா பாதித்த சீனப்பெண்ணை வெளிநாட்டுக்கு அனுப்புகிறது ஸ்ரீலங்கா அரசு

455shares

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டதாக அடையாளம் காணப்பட்ட சீனப் பெண்ணை, மேலதிக பரிசோதனைகளுக்காக வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கு ஸ்ரீலங்கா சுகாதார அமைச்சு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

சுற்றுலா மேற்கொள்ளும் நோக்கில் கடந்த 19 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்த 43 வயதையுடைய சீனப் பெண், கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டதாக நேற்றைய தினம் உறுதிப்படுத்தப்பட்டது.

கொழும்பில் உள்ள தொற்று நோய்கள் தொடர்பான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே அவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது.

குறித்த பெண்ணுடன் இலங்கைக்கு வருகை தந்த ஏனைய சீனப் பிரஜைகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதையும் தவறாமல் படிங்க
பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்

பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்

இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

விமான நிலையம் திறப்பு தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்

விமான நிலையம் திறப்பு தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்