ஸ்ரீலங்காவில் 10 பேருக்கு கொரோனா? அரசாங்க வைத்திய சங்கம் வெளியிட்டுள்ள தகவல்

288shares

உலகையே அச்சுறுத்தும் கொரோனா நோய் தொற்றுக்குள்ளாகி உள்ளதாக சந்தேகிக்கப்படும் பத்து பேர் இலங்கையில் சிகிச்சை பெற்று வருவதாக அரசாங்க வைத்திய சங்கம் தெரிவித்துள்ளது.

உலக நாடுகளையே கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி வருகின்றது.

இந்நிலையில் கொடிய கொரோனா வைரஸில் இருந்து தப்பித்துக்கொள்ள உலக நாடுகள் அனைத்தும் முன்னெச்சரிக்கையாக செயற்பட்டுவருகின்றன.

இந்நிலையில் இலங்கையில் கொரோனா நோய் தொற்றுக்குள்ளாகி உள்ளதாக சந்தேகிக்கப்படும் பத்து பேர் சிகிச்சை பெற்று வருவதாக அரசாங்க வைத்திய சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில் வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு அனைத்து பிரிவும் உடனடியாக தலையிட வேண்டும் என சங்கத்தின் செயலாளர் ஹரித அழுத்தே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த கருத்தினை வெளியிட்டார்.

தற்போது கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியதாக சந்தேகிக்கப்படும் 10 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பொதுமக்கள் முகத்தை மறைக்கும் வகையில் முக கவசம் அணிவது கட்டாயம் இல்லை எனவும் தேவையற்ற அச்சங்களை ஏற்படுத்தி கொள்ள வேண்டாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய நிலையில் கொழும்பு உட்பட பல பகுதிகளில் முகத்தை மறைக்கும் முக கவசங்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

வைரஸ் தாக்கத்திற்கு அச்சப்பட்ட அதிக விலை கொடுத்து முக கவசங்களை கொள்வனவு செய்ய வேண்டாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஒரு முக கவசம் ஒன்று சுமார் ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. எனவே மக்கள் விழிப்பாக இருக்குமாறும் அதிகள அளவில் சன நெரிசல் உள்ள இடங்களை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


you may like this

இதையும் தவறாமல் படிங்க
உயிர்த்தஞாயிறு தாக்குதல் -மைத்திரியின் பேரம் அம்பலம்

உயிர்த்தஞாயிறு தாக்குதல் -மைத்திரியின் பேரம் அம்பலம்

வெளியேறிய  ரணில் மற்றும் சுமந்திரன்!

வெளியேறிய ரணில் மற்றும் சுமந்திரன்!

நான் ஒருபோதும் அப்படி கூறவே இல்லை -பல்டியடித்தாரா அமைச்சர்?

நான் ஒருபோதும் அப்படி கூறவே இல்லை -பல்டியடித்தாரா அமைச்சர்?