பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ரணிலிடம் சிஐடி விசாரணை!

5shares

கடந்த வருடம் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் குற்றப் புலனாய்வு பிரிவினர் வாக்கு மூலம் பெற்றுள்ளனர்.

இதன்போது ரணிலின் வீட்டிற்கு சென்ற விசாரணைக் குழு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பான முன்கூட்டிய எச்சரிக்கைகளை அவர் அறிந்திருந்தாரா என்பது பற்றி வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த ஆட்சியில் தான் பிரதமராக பதவி வகித்தாலும் முக்கியமான பாதுகாப்பு கூட்டங்களில் தான் பங்குகொள்ளவில்லை எனவும், மைத்திரிபால சிறிசேனவே அவற்றை நேரடியாக கையாண்டார் என்றும் இந்த விசாரணைகளின்போது ரணில் தெரிவித்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதையும் தவறாமல் படிங்க
loading...