வர்த்தகர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை! விடுக்கப்படும் எச்சரிக்கை

17shares

விலைக்கட்டுப்பாட்டை கவனத்திற் கொள்ளாத வர்த்தகர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

பொரளையிலுள்ள என்.எம்.பெரேரா ஞாபகார்த்த நிலையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் உரை நிகழ்த்தும் போதே நீர் வழங்கல் வசதிகள் இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

அரிசியின் விலைக் கட்டுப்பாட்டை சரியான முறையில் அமுல்படுத்தி நுகர்வோர் பயனடைவதற்கு வழிசமைக்கும் வகையில் அரசாங்கம் நெல் கொள்வனவுக்காக 150 கோடி ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் கூறினார்.

கூட்டுறவுக் கடைகளில் ஒரு கிலோஅரிசி ரூபா 80 முதல் 85 வரை விற்பனை செய்தாலும் ஏனைய கடைகளில் அந்த விலைக் கட்டுப்பாட்டை கவனத்திற் கொள்ளாதிருப்பதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். வர்த்தகர்களின் கவனயீனப் போக்குக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான அவசியமும் ஏற்பட்டுள்ளது.

பாவனையாளர் அதிகார சபையை பலப்படுத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதையும் தவறாமல் படிங்க
இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்

பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு வெளிவந்த மகிழ்ச்சியான செய்தி

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு வெளிவந்த மகிழ்ச்சியான செய்தி