கொரோனா வைரஸ் தாக்கம்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொருத்தப்பட்டது விசேட கருவி!

137shares

கட்டுநாயக்க விமான நிலையத்தில் காற்றினால் தொற்றக்கூடிய குறித்த வைரஸினை கொன்று வளி மண்டலத்தை சுத்தப்படுத்தும் கருவி பொருத்தப்பட்டுள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸ் சீனாவில் உருவாகி மத்திய கிழக்கு நாடுகளையும் தாக்கி வருகிறது. இந்நிலையில், இலங்கையிலும் சீன நாட்டை சேர்ந்த இருவர் குறித்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இலங்கையில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் என சந்தேகிக்கப்படும் 10 பேர் இனங்காணப்பட்டுள்ளதோடு, இலங்கையர்கள் இருவரும் அதில் உள்ளடங்குகின்றனர்.

இதற்கிடையில், வெளிநாடுகளில் இருந்து இலங்கை வரும் பயணிகள் மூலமாகவும் கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்படலாம் என்னும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து, கட்டுநாயக்க விமான நிலையத்தில் பல்வேறு ஏற்பாடுகளை விமான நிலைய அதிகாரிகள் முன்னெடுத்துவருகின்றார்கள்.

இதற்கமைய, காற்றினால் தொற்றக்கூடிய குறித்த வைரஸினை கொன்று வளி மண்டலத்தை சுத்தப்படுத்தும் கருவி கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ய

இதையும் தவறாமல் படிங்க
இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்

பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு வெளிவந்த மகிழ்ச்சியான செய்தி

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு வெளிவந்த மகிழ்ச்சியான செய்தி