ஸ்ரீலங்காவில் சீனர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை!

138shares

இலங்கையில் சுற்றுலாப் பயணம் மேற்கொண்டுள்ள சீனர்களுக்கு ஹொட்டல்களில் தங்குவதற்கு ஹொட்டல் உரிமையாளர்கள் மறுப்புத் தெரிவித்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் காரணமாக அந்நாட்டில் தற்போது வரை 132பேர் பலியாகியுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இலங்கையிலும் பலருக்கு கொரோனா தொற்று நோய் பரவியிருக்கலாம் என்னும் சந்தேகத்தில் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, சீனர்களினால் இலங்கையில் கொரோனா தொற்று அதிகரிக்கலாம் என்ற சந்தேகம் இலங்கையர்களிடையே ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து ஹொட்டல்களில் தங்குவதற்கு சீனர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள இலங்கை உள்வருகை சுற்றுலா நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சங்கத்தின் உறுப்பினர் மஹேன் காரியவசம்,

“அனைத்து சீன நாட்டினரும் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஹொட்டல் உரிமையாளர்கள் கருதக்கூடாது.

இலங்கையில் விடுமுறையை கழிக்க வந்த சீன நாட்டினருக்கு தற்போது சில ஹொட்டல்கள் மறுத்துவிட்டன, தற்போது நாட்டில் 800 க்கும் மேற்பட்ட சீன சுற்றுலா பயணிகள் உள்ளனர்.

சீனாவில் இருந்து வந்த சுற்றுலாப்பயணி ஒருவருக்கு கொரானா வைரஸ் தாக்கம் கண்டறியப்பட்டது இதனை அடுத்து அவர் இருந்த ஹொட்டல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இதனால் சீன சுற்றுலா பயணிகளினால் கொரோனா வைரஸ் பரவும் என்ற அச்சத்தினால் சில ஹொட்டல்கள் அவர்களுக்கான அனுமதியை மருத்துள்ளனர்” என்றார்.

இதையும் தவறாமல் படிங்க
loading...