ஸ்ரீலங்கா நாடாளுமன்றம் கலைக்கப்படும் திகதி அறிவிப்பு!

58shares

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மார்ச் மாதம் 1ஆம் திகதி நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தலை நடத்த நடவடிக்கை எடுப்பார் என வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர்,

“கடந்த 2015ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட நாடாளுமன்றமே எமக்கு கிடைத்திருக்கிறது. ஸ்திரமற்ற நாடாளுமன்றத்துக்குப் பதிலாக பலமான ஸ்திரமான ஒரு நாடாளுமன்றமே நாட்டுக்கு அவசியமாக இருக்கின்றது.

அரசியலமைப்பின் 19ஆவது திருத்த சட்டத்தின் ஊடாக நாடாளுமன்றத்தை நான்கரை வருடங்கள் முடியும் வரை ஜனாதிபதியினால் கலைக்க முடியாது.

முன்னைய ஆட்சியாளர்கள் உருவாக்கிய சட்டங்களினால் முழுநாட்டையும் குழப்பியிருக்கின்றனர். எனவே மார்ச் மாதம் 1ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தலை நடத்த நடவடிக்கை எடுப்பார்.

அதனூடாக புதியதொரு நாடாளுமன்றம் உருவாகும். அதன் மூலமாக நாட்டை புதியதொரு பாதைக்கு கொண்டுசெல்ல முடியும்.

புதிய வேலைத்திட்டங்களை உருவாக்க முடியும். அத்துடன் புதிய நாடாளுமன்றம் அமைந்த பின்னர் வரவுசெலவுத்திட்டத்தை சமர்ப்பித்து நாட்டை பலமான அபிவிருத்தியை நோக்கி கொண்டுசெல்வோம்” என்றார்.

இதையும் தவறாமல் படிங்க
loading...