இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கப்பட்ட பெண் மீண்டார்! வெளியானது தகவல்

396shares

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பாக இனங்காணப்பட்ட 43 வயதான சீனப் பெண், சிகிச்சையைத் தொடர்ந்து முழுமையாக குணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதாக ஐ.டி.எச். வைத்தியசாலை நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் இன்றைய தினம் தகவல் வெளியிட்டுள்ள வைத்தியசாலை நிர்வாகம்,

குறித்த பெண் ஐ.டி.எச். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது அவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் தொடர்ச்சியாக அவருக்கு கொடுக்கப்பட்ட சிகிச்சையின் பின்னர் அவர் முழுமையாக குணமடைந்துள்ளார் என அறிவித்துள்ளது.

இதேவேளை அபிவிருத்தித் திட்டங்களில் பணிபுரியும் சீன பிரஜைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை பரிசோதிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
உயிர்த்தஞாயிறு தாக்குதல் -மைத்திரியின் பேரம் அம்பலம்

உயிர்த்தஞாயிறு தாக்குதல் -மைத்திரியின் பேரம் அம்பலம்

வெளியேறிய  ரணில் மற்றும் சுமந்திரன்!

வெளியேறிய ரணில் மற்றும் சுமந்திரன்!

நான் ஒருபோதும் அப்படி கூறவே இல்லை -பல்டியடித்தாரா அமைச்சர்?

நான் ஒருபோதும் அப்படி கூறவே இல்லை -பல்டியடித்தாரா அமைச்சர்?