விடுதலைப்புலிகள் மக்கள் பேரவை கோட்டாபயவின் இணை கட்சியா? விளக்கும் அதன் தலைவர்!

166shares

விடுதலைப்புலிகள் மக்கள் பேரவையை ஏனைய கட்சிகள் தவறிழைத்ததாலேயே உருவாக்கியிருக்கின்றோம் என அக் கட்சியின் தலைவர் த.இ.மலரவன் தெரிவித்தார்.

இன்று வவுனியா குருமான்காட்டில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலே இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கும்‌ போது,

புலம்பெயர் தேசங்களில் இருந்து ஒரு சில விமர்சனங்கள் எங்களை நோக்கி வைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இணையதளம் ஊடாகவும் வலைத்தளம் ஊடாகவும் பரவி கொண்டிருக்கிறது. நாங்கள் இப்பொழுது தான் இந்தப் பயணத்தில் காலடி எடுத்து வைத்து ஆரம்பித்திருக்கிறோம்.

விடுதலைப்புலிகள் மக்கள் பேரவை அண்மையில் ஒன்று திரட்டப்பட்டு முதலாவது ஊடக சந்திப்பாக இருக்கின்றது.

எல்லோரும் கூறுவது போல் மக்கள் எல்லோரும், விடுதலைப்புலி போராளிகள் எல்லோரும் எங்களோடு இருக்கின்றார்கள் என்பதையும் தாண்டி அவர்களுக்காக நாங்கள் நிற்கின்றோம் என்பதுதான் ஒரு முக்கியமான செய்தியாக நாங்கள் வெளிப்படுத்துகிறோம்.

போராளிகளுக்காகவும், மக்களுக்காகவும் நாங்கள் இருக்கின்றோம். அதே போன்று புலம்பெயர் தேசத்தில் வாழ்கின்ற எனது உறவுகளுக்கு ஒரு அன்பான வேண்டுகோளை நான் விடுக்கின்றேன் எமது கட்சி சார்பாக நாங்கள் எந்த ஒரு நிதி சேகரிப்பு அல்லது நிதி வங்கிக் கணக்குகளையும் நாங்கள் இயக்கவில்லை.

விரைவில் நாங்கள் ஒரு இணையம் ஒன்றை உருவாக்கி அதனூடாக கணக்கு இலக்கத்தையும் ஆரம்பித்து மக்களுக்கான தேவையை எப்படி பூர்த்தி செய்ய வேண்டும், அதை எப்படி கொண்டு செல்ல வேண்டும் என்பதனை மிக விரைவில் அறிவிப்போம்.

நாம் கட்சி ஆரம்பிக்கப்பட்டு குறுகிய நாட்களில் புலம்பெயர் தேசங்களில் ஒரு சிலர் நிதி வசூல் வேட்டையில் ஈடுபட்டு இருக்கிறார்கள் என்று தகவல் வந்திருக்கின்றது. நாங்கள் நிச்சயமாக அப்படியான எந்தவிதமான நிதி வசூலும் இதுவரை செய்யவில்லை.

எதிர்வரும் தேர்தலை நாங்கள் சந்திக்க இருக்கின்றோம். அதற்கு முதல் மாவட்ட ரீதியாக மாவட்ட இணைப்பாளர்களை ஒருங்கிணைக்க போகின்றோம். மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களூடாக மக்கள் சந்திப்பை நாங்கள் நடத்த இருக்கின்றோம்.

எங்களைபற்றி நிறையபேருக்கு விமர்சனங்கள் இருக்கின்றது. இராணுவ புலனாய்வாளர்களால் இயக்கபடுகின்றதோ? அல்லது கோட்டாபாயவினுடைய இணை கட்சியோ என நிறைய பேர் விமர்சனம் செய்கிறார்கள்.

ஒவ்வொரு சுதந்திரத்தையும் நாங்கள் போராடி தான் பெற வேண்டி இருக்கின்றது. மாவீரர் துயிலுமில்லங்களில் போராளிகள், மாவீரர்கள், மாவீரர்களின் பெற்றோர்கள் இன்றைக்கு விளக்குகேற்றுகின்றோம் என்று கூறினால் அதை நாங்கள் போராடி பெற்றிருக்கின்றோம்

இந்த விடுதலைப்புலிகள் என்ற பெயரை அந்த பாதையை தாண்டி நாங்கள் இன்றைக்கு இந்த பெயருடன் பயணிக்கின்றோம் என்றால் அந்த பெயரையும் போராடி தான் பெற்றிருக்கின்றோம்.

இதெல்லாம் எவ்வளவு சாத்தியக்கூறோ இந்த விடுதலைப் புலிகள் மக்கள் பேரவை என்ற பெயருடன் நாங்கள் பயணிப்பதும் சாத்தியக்கூறு என்பதை நான் புலம்பெயர் தேசங்களிலும் இதை விமர்சிக்கும் விமர்சகர்களுக்கும் நாங்கள் தெரிவித்து கொள்கின்றோம்.

நாங்கள் யாரையும் விமர்சிக்கவில்லை. எந்த கட்சியையும் விமர்சித்து நாங்கள் விமர்சனத்துக்குள்ளாக்கவில்லை. ஏனென்றால் இது விமர்சிக்கும் கட்சி அல்ல. நாங்கள் மக்களுக்கான சேவைகளை இன்று பொருளாதார ரீதியாக நாங்கள் கட்டி எழுப்ப வேண்டிய சூழலில் இருக்கின்றோம். கல்வி பொருளாதாரம் முக்கியத்துவமாக இருக்கிறது. நிச்சயமாக நாங்கள் ஒரு தீர்வு திட்டத்தை வைத்திருக்கிறோம் அந்த தீர்வு திட்டம் ஊடாக உருவாக நாங்கள் கலந்தாலோசிப்போம்.

ஏனையோர் கூறுவது போல கொள்கை இன்றி பயணிக்கும் கட்சி அல்ல. ஏனென்றால் நாங்கள் போராட்ட காலத்தில் களத்தில் இருந்து வந்தவர்கள். இன்றைக்கு யுத்தம் முடிந்து நாங்கள் பதினோராவது ஆண்டில் காலடி எடுத்து வைத்திருக்கின்றோம். வடுக்கள் இன்னும் மாறவில்லை றணத்தின் கடுப்போடு தான் எமது மக்கள் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

புலம்பெயர் தேசத்தில் வாழும் உறவுகள், தாயகத்தில் வாழும் உறவுகள் உங்கள் இருவருக்குமான வேண்டுகோள். விமர்சனங்களை விட்டுவிட்டு எமது மக்களுக்கான முன்னேற்றம் எதுவோ அதற்கான வழியை நாங்கள் தேர்ந்தெடுப்போம் அந்த வழியில் ஊடாக நாங்கள் பயணிப்போம் என்பது மிக முக்கியமானதென்பதனை கூறிக்கொள்கின்றேன்.

இரண்டு வெற்றி பாதைகளை நான் உங்களுக்கு சொல்ல இருக்கின்றேன். விட்டுக்கொடுப்பது, புரிந்துணர்வு என்றுமே போராளிகளுக்கு இருந்துகொண்டே இருக்கின்றது.

அது நிச்சயமாக எந்த ஒரு காழ்ப்புணர்ச்சியும் இல்லாமல் ஒன்று கூடுவார்கள். மக்களுக்காக ஒரு பயணத்தை‌ முன்னெடுக்க வேண்டுமென்றால் அதில் நிச்சயமாக முன்னெடுப்பார்கள்.

தனித்து தன்னிச்சையாக ஒரு பாதையில் பயணிப்போம் என்பதை நாங்கள் ஒரு போதும் கூறியதல்ல. வடக்கிலே பெரும்பாலான தமிழ் கட்சிகள் இருக்கின்றன. மக்களுக்கான ஒரு தீர்வு திட்டம் ஒரு நல்ல திட்டம் ஒன்று அமைவதாக இருந்தால் நிச்சயமாக நாங்கள் கலந்தாலோசிப்போம். நாங்கள் எந்த கட்சியையும் விமர்சிக்கவுமில்லை. நாங்கள்‌ யாருடனும் கலந்தாலோசிக்க மாட்டோம் அல்லது நாங்கள் இவர்களுடன் போய் பேச மாட்டோம் மக்களுக்கான தீர்வு என்பதை நாம் ஒருபோதும் கூறியதில்லை.

ஏனென்று கேட்டால் மக்களுக்கான தீர்வை நாங்கள் முன் வைக்க வேண்டும் என்று சொன்னால் நாங்கள் எவரிடமும் கீழிறங்கி பேசுவதற்கு தயாராக இருக்கின்றோம்

ஏனென்று கேட்டால் இன்றுவரைக்கும் நீங்கள் உங்களுக்கு தெரியும் பதினொரு ஆண்டு காலம் போய்விட்டது நாங்கள் தீர்வொன்றை முன்வைக்கும்பொழுது முதலில் மக்களுக்காக மக்களுக்கு தான் அதை தெளிவுபடுத்துவோம் அதன் பின்பு தான் நாங்கள் அரசியல் கட்சிகளுக்கும் ஏனைய தமிழ் கட்சிகளுக்கும் நாங்கள் அதை தெரியப்படுத்துவோம். ஏனென்றால் மக்களுக்கான தீர்வு மக்கள் தான் அதை புரிந்து கொள்ள வேண்டும்.

இதுவரை காலம் தீர்வு திட்டம் இருக்கின்றது அரசுக்கு மட்டும்தான் தெரியப்படுத்தப்பட்டிருக்கிறதே ஒழிய மக்களுக்கான ஒரு தெளிவு இன்று வரைக்கும் யாருக்கும் கிடைத்ததில்லை.

தமிழ் தலைமைகள் தமிழ் போராளிகளையும், மக்களையும் கைவிட்டு விட்டார்கள் என்பது தமிழ் மக்கள் மனதிலே நிச்சயமாக அதற்கான விடை இருக்கின்றது.

எமது மக்களும், போராளிகளும் எதிர்பார்ப்புடன் கடந்த பதினொரு ஆண்டு காலமாக வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களுக்குரிய எதிர்பார்ப்பை குறைந்தபட்சம் பூர்த்தி செய்ய முடியாவிட்டாலும் சரி அரசுடன் மக்களுடன் இணைந்து அதை செயலாற்றுவதற்கான ஒரு நடவடிக்கையும் முடிவையும் எடுத்திருக்கிறது.

இன்று தனிப்பட்ட முறையில் அரசுடன் நாங்கள் பேசுகிறோம் அரசுடன் கதைக்கின்றோம் என்று சொல்வது எந்தவிதமான நியாயமும் அல்ல. எங்களுக்குரிய ஒரு அரசு தீர்வொன்று எங்களை கைவிட்டுவிட்டார்கள் என்று நாங்கள் ஒருபோதும் சொல்லவில்லை. ஆனால் கைவிடப்பட்டிருக்கிறார்கள் யாரால் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

இன்றைக்கு போராளிகளும் மக்களும் நிச்சயமாக அரசியல் ரீதியில் பின்னோக்கி தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். கைவிட்டு விட்டார்கள் என்பதை விட பின்னோக்கி தள்ளப்பட்டு கொண்டிருக்கிறார்கள். யுத்தகாலத்தில் சொல்லலாம் நாங்கள் எந்த ஒரு முடிவையும் எட்ட முடியாத ஒரு காலத்தில் ஒரு சூழலில் வாழ்ந்து வந்தோம். ஏனென்றால் அன்று ஆயுத போராட்ட சூழலில் நாங்கள் இருந்தோம்.

இன்று ஆயுதம் மௌனித்து அரசியல் உயிர்ப்பித்திருக்கின்றது. அரசியல் ஜனநாயக நீரோட்டத்தில் நாங்கள் பயணித்துக் கொண்டிருக்கும் போது எங்களை யாரும் பின்னோக்கி தள்ளுவதற்கு இடம் கொடுக்க மாட்டோம். நாங்கள் மக்களை முன்னோக்கி செல்ல வேண்டும் என்ற ஒரு காரணத்தினால் தான் விடுதலைப் புலிகள் மக்கள் பேரவையை உருவாக்கி இதில் பயணம் செய்கின்றோம்.

நாங்கள் ஒருபோதும் சம்பந்தன் ஐயாவை நீங்கள் கட்சியை விட்டு வெளியே போங்கள் என்று சொன்னது கிடையாது. எந்த ஒரு அரசியல் தலைவர்களையும் நாங்கள் வெளியே போங்கள் என்று சொன்னது கிடையாது. ஆனால் நாங்கள் என்ன சொல்லுகிறோம். இளைய தலைமுறைகளை கைகோர்த்து பாராளுமன்றம் அழைத்து சென்று அவர்களுக்கு பின்புலமாக இருந்து நீங்கள் அவர்களை வழி நடத்துங்கள். மக்களுக்கான அரசியலை அவர்களுக்கு போதியுங்கள்.

இந்த ஒரு தவறை இழைத்த ஒரு காரணத்திற்காக தான் இன்று இந்த தலைமை கூடியிருக்கின்றது. நாங்கள் ஒவ்வொரு விஷயத்தையும் போராடித்தான் பெறவேண்டும் விடுதலைப் புலிகள் என்பது எமது மக்களின் ஒரு இலட்சனை அந்த இலட்சனை என்றும் அழியவில்லை. இன்று விடுதலைப் புலிகள் பெயரில் ஏனைய கட்சிகள் பதிவு செய்யப்பட்டு அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்டு இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆகையால் விடுதலைப் புலிகள் மக்களின் ஏக பிரதிநிதிகளாக வாழ்ந்தவர்கள். வாழ்ந்து கொண்டிருக்கின்றவர்கள். என்றுமே மக்களின் மனதிலிருந்து அதை அழிக்க முடியாது. இந்த விடுதலைப்புலிகள் என்ற ஒரு பெயர் இன்று மக்களுக்கோ அல்லது ஏனையர்களுக்கோ போராளிகளுக்கோ இடைஞ்சல்களாக அல்ல இதை உற்றுநோக்கின்ற எமக்கு எதிராக செயல்படுகின்ற அல்லது மக்களை ஓரம் கட்ட வேண்டும் விடுதலைபுலிகள், போராளிகளை ஓரம் கட்டவேண்டும் என்று நினைக்கிறவர்களுக்கு தான் இந்த விடுதலைப் புலிகள் என்ற பெயர் இடைஞ்சலாக இருக்கின்றது என்பதை நான் தெரிய படுத்துகின்றேன் என மேலும் தெரிவித்தார்.

இதையும் தவறாமல் படிங்க
பூப்புனித நீராட்டு விழாவை தடுத்து நிறுத்திய பொலிஸார்

பூப்புனித நீராட்டு விழாவை தடுத்து நிறுத்திய பொலிஸார்

எல்லை மீறும் கொரோனா -இங்கிலாந்தில் நான்கு வார கால  ‘லொக் டவுனை’ அறிவித்தார் பொரிஸ் ஜோன்சன்

எல்லை மீறும் கொரோனா -இங்கிலாந்தில் நான்கு வார கால ‘லொக் டவுனை’ அறிவித்தார் பொரிஸ் ஜோன்சன்

“9 பேரை கொலை செய்யப்போகின்றேன்” எனக் கூறி தப்பிச் சென்ற பொலிஸ் அதிகாரி

“9 பேரை கொலை செய்யப்போகின்றேன்” எனக் கூறி தப்பிச் சென்ற பொலிஸ் அதிகாரி