இராஜகிரிய வாகன விபத்து-இரகசிய வாக்குமூலம் வழங்கினார் முன்னாள் அமைச்சரின் சாரதி!

9shares

நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் சாரதி துசித திலும் குமாரவிடம் சுமார் ஒரு மணித்தியாலம் இரகசிய வாக்கு மூலம் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு மேலதிக நீதவான் காஞ்சனா நேரஞ்சனா டி சில்வாவின் உத்தியோகபூர்வ அறையில் இன்றைய தினம் இந்த இரகசிய வாக்கு மூலம் பெறப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

2016 ஆம் ஆண்டு ராஜகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் முன்னாள் ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டின் இரண்டாவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள அவரின் சாரதி துசித திலும் குமார கொழும்பு நீதவான் முன்னிலையில் இரகசிக வாக்கு மூலம் ஒன்றினை வழங்கியுள்ளார்.

அதன்படி, குறித்த சம்பவம் தொடர்பில் துசித திலும் குமார என்ற சந்தேக நபர் கடந்த 06 ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
loading...