கொரோனாவிலிருந்து தப்பிக்க இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

96shares

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள, ஆயுர்வேத ஒளடதங்களை பயன்படுத்துமாறு ஆயுர்வேத மருந்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் திருமதி. சாகல அபேவிக்ரம பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

சீனாவில் உருவாகிய கொரோனா வைரஸ் 17 நாடுகளுக்கு மேல் பரவியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் தாக்கம் இலங்கையிலும் ஏற்பட்டதையடுத்து இலங்கையர்கள் மத்தியில் அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள ஆயுர்வேத மருந்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் திருமதி. சாகல அபேவிக்ரம,

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள, ஆயுர்வேத ஒளடதங்களை பயன்படுத்துவதன் மூலம் மக்களின் ஆரோக்கியத்தை பேண முடியும்.

சீதாராமா என்ற 2 மருந்து மூலிகை உருண்டை அல்லது 4 உருண்டைகளை பயன்படுத்துவது பொருத்தமானது.

இந்த மருந்துகளுக்கு மேலதிகமாக உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மல்லி, இஞ்சி உட்பட பஸ்பங்கு எனப்படும் சிங்கள ஆயுர்வேத ஐந்து வகை ஒளடதம் மிகவும் பொருத்தமானதாகும்.

தொண்டையில் வலி, தும்மல் ஆகியவற்றை கட்டுப்படுத்துவதற்கு பயன்படுத்துவதற்கு பயன்படுத்தும் சிகிச்சை முறையையும் பயன்படுத்த முடியும் என்றார்.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொடர்பான கையேடொன்றை வழங்க ஆயுர்வேத திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
இங்கிலாந்து பிரதமர் விடுத்துள்ள எச்சரிக்கை - ஊரடங்கை அமுல்படுத்தவும் திட்டம்

இங்கிலாந்து பிரதமர் விடுத்துள்ள எச்சரிக்கை - ஊரடங்கை அமுல்படுத்தவும் திட்டம்

உயிர்த்தஞாயிறு தாக்குதல் -மைத்திரியின் பேரம் அம்பலம்

உயிர்த்தஞாயிறு தாக்குதல் -மைத்திரியின் பேரம் அம்பலம்

வெளியேறிய  ரணில் மற்றும் சுமந்திரன்!

வெளியேறிய ரணில் மற்றும் சுமந்திரன்!