இந்தியாவில் நானும் ஒரு தீவிரவாதிதான்! சீமான் ஆவேசம்

90shares

ரஜினியை வைத்து மத்திய அரசு நாடகம் போடுகிறது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

மதுரையில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

“ரஜினியை வைத்து மத்திய அரசு நாடகம் போடுகிறது. தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன்,மீத்தேன் திட்டத்துக்கு மக்கள் கருத்து தேவையில்லை என சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்தார்.

ஆனால், மீத்தேன் திட்டத்திற்கு கையெழுத்திட்டவர் அவர்தான். காங்கிரஸ் ஆட்சியின் போது குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு கொண்டு வரப்பட்ட போது தி.மு.க.ஆதரவு தெரிவித்தது.

பா.ஜ.க.வுக்கு எதிரானது தி.மு.க.என இன்னும் மக்கள் நம்பி கொண்டுள்ளனர். மேலும் பயங்கரவாதத்திற்கும் தீவிரவாதத்திற்கும் உள்ள வேறுபாட்டை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அத்துடன் நாங்கள், எங்கள் கருத்தை கொள்கையை தீவிரமாக மக்களிடத்தில் கொண்டு போய் சேர்க்கிறோம். இதனால் நானுமொரு தீவிரவாதிதான்” என்றார்.

இதையும் தவறாமல் படிங்க
loading...