முக கவசங்களுக்கான விலையை நிர்ணயம் செய்தது அமைச்சு

121shares

முக கவசத்திற்கான அதிகபட்ச சில்லறை விலையினை நிர்ணயிக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

கொரோனா வைரஸ் நிலைமை காரணமாக அதிக விலைக்கு முக கவசங்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின் தீர்மானத்தின் படி ஒருமுறை பயன்படுத்தக்கூடிய முக கவசத்திற்கு அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

ஒருமுறைப் பயன்படுத்தக்கூடிய முக கவசத்தின் அதிகபட்ச சில்லறை விலை 15 ரூபாய் எனவும் சுவாச வடிகட்டி துகள்களுடன் கூடிய N95 ரக முக கவசத்தின் அதிகபட்ச சில்லறை விலை 150 ரூபாய் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எந்தவொரு மருந்தகம் அல்லது விற்பனை நிலையங்களில் இவை கூடுதலான விலைக்கு விற்பனை செய்யப்படுமாயின் அவற்றுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள நுகர்வோர் அலுவல்கள் தொடர்பான அதிகார சபை தீர்மானித்துள்ளது.

கூடுதலான விலைக்கு முக கவசம் விற்பனை செய்யப்படுவதாக பலர் முறையிட்டிருப்பதாகவும் அதிகார சபை பணிப்பாளர் நாயகம் எம்.எஸ்.பௌஷி தெரிவித்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
loading...