கொரோனா வைரஸ் தொடர்பில் அரசாங்கம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

25shares

கொரோனா வைரஸ் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் மேற்கொள்ளப்படும் உண்மைக்கு புறம்பான பிரசாரங்களைக்கண்டு ஏமாற வேண்டாம் என அரசாங்க தகவல் திணைக்களம் மக்களை அறிவுறுத்தியுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக அந்த திணைக்களம் இன்று (29) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளது.

வைரஸ் தொற்றுக்கு உள்ளான நபர் அல்லது இடம் ஒன்று இனங்காணப்பட்டால் அது தொடர்பாக அரச சுகாதார அதிகாரிகளால் ஊடகங்கள் வாயிலாக பொதுமக்களுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, சிலரது ஒளிப்படங்களை பதிவிட்டு அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக சமுக வலைத்தளங்களில் சிலர் பொய்யான தகவல்களை பரப்பி வருவதாகவும் அவ்வாறு வேறு எந்த வைத்தியசாலைகளிலும் நோயாளர்கள் அனுமதிக்கப்படவில்லை எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொய்யான தகவல்களை நம்ப வேண்டாம் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்

பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு வெளிவந்த மகிழ்ச்சியான செய்தி

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு வெளிவந்த மகிழ்ச்சியான செய்தி