ஸ்ரீலங்கா செல்கின்றீர்களா? வழங்கப்பட்டது பயண ஆலோசனை

83shares

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை சுகாதார பரிசோதனைகள் மூலம் உறுதி செய்யப்பட்டதை அடுத்து , பிரிட்டிஷ் வெளியுறவு மற்றும் கொமன்வெல்த் அலுவலகம் தமது குடி மக்களுக்கு பயண ஆலோசனையை வழங்கியுள்ளன.

பிரிட்டிஷ் வெளியுறவு மற்றும் கொமன்வெல்த் அலுவலகம் புதன்கிழமை பின்வரும் பயண ஆலோசனையை வெளியிட்டது.

இலங்கையில் சீனப் பெண்மணி கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானதை இலங்கை சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. வைரஸ் பரவாமல் தடுக்க இலங்கை அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வைரஸ் குறித்த தகவல் தேவைப்படுபவர்களுக்கு சுகாதார அமைச்சகம் 24 மணி நேர ஹொட்லைன் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

இலங்கையின் சர்வதேச விமான நிலையத்திற்கு பயணிகள் மட்டுமே நுழைய அனுமதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. . இலங்கைக்குபயணம் செய்தால் அனைத்து பிரிட்டிஷ் குடிமக்களும் அரச அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

விமான நிலையம் திறப்பு தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்

விமான நிலையம் திறப்பு தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு வெளிவந்த மகிழ்ச்சியான செய்தி

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு வெளிவந்த மகிழ்ச்சியான செய்தி