கொரோனா வைரஸ் -கோட்டாபயவிடம் விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை

27shares

சீனாவில் தொடங்கி தற்போது உலகநாடுகள் பலவற்றுக்கும் பரவியுள்ள கொரோனா எனும் வைரஸ் தொற்றுக்கான இந்த காலப்பகுதியை ஜனாதிபதி கோட்டாபய அனர்த்த நிலையாக பிரகடனப்படுத்தவேண்டுமென அவசர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமைச்சுக்களுக்கான செயலாளர்களின் தேசிய அமைப்பின் தலைவர் கீர்த்தி ஸ்ரீ வீரசிங்க இந்த அவசர கோரிக்கையை விடுத்துள்ளார்.

கொழும்பு - கொள்ளுப்பிட்டியிலுள்ள வொன்டர் ஹோட்டலில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்

சீனாவில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் இலங்கை மாணவர்களை உடனடியாக நாட்டிற்கு அழைத்துவருவதற்காக எடுக்கப்பட்டுள்ள முயற்சிகளுக்காக ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்கின்றோம்.

கொரானா வைரஸிடமிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக முகமூடிகளை அணியுமாறு வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நாட்டிலுள்ள அனைவருக்கும் முகமூடிகள் கிடைப்பதற்கான ஏற்பாடுகள் தொடர்பிலும் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.

இந்த கவசங்களுக்கான கேள்வி அதிகரித்துள்ளமையால் தற்போது இதன் விலை 13 மடங்காக அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த நிலைமையை கருத்திற்கொண்டு கவசங்களுக்கான விலைக்கட்டுப்பாட்டையும் அரசாங்கம் அறிவிக்க வேண்டும்.

இந்த கவசங்களை கொள்வளவு செய்வதற்கான வசதிகள் இன்றி இருக்கும் சாதாரண மக்களுக்கு கவசங்களை பகிர்ந்தளிப்பதற்கான செயற்பாடுகள் சுகாதார அமைச்சினால் முன்னெடுக்கப்பட வேண்டும். இந்நிலையில் நோய்க்கு நாம் சிகிச்சை அளிப்பதற்கு முன்னர் அந்த நோய் தொற்றுக்கு உள்ளாகாமல் பாதுகாப்பாக இருப்பதே மிகச்சிறந்ததாகும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதையும் தவறாமல் படிங்க
loading...