யாழில் இன்றிரவு நடந்த சம்பவம் -பலரின் உயிரை காப்பாற்றிய பொலிஸ்

567shares

யாழ்ப்பாணத்தில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபை பஸ்ஸின் சாரதி மதுபோதையில் பேருந்தை செலுத்தி சென்றநிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்றிரவு 7.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.இதன்மூலம் பயணிகள் பலரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த பேருந்தில் இருந்து பயணிகள் இறக்கப்பட்டு இ.போ.ச சாலையில் இருந்து வரவழைக்கப்பட்ட வேறு பஸ்சில் செல்ல அனுமதிக்கப்பட்டார்கள்

இன்று இரவு ஏழு முப்பது மணிக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்பட்ட அக்கரைப்பற்றுக்கான பேருந்து யாழ்ப்பாணம் நாவற்குழி வரவேற்பு வளைவு பகுதியில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் விசேட அதிரடிப்படையினரால் சோதனையிட்டபோது பஸ்ஸின் சாரதி மதுபோதையில் காணப்பட்டதோடு அவரது ஆசனத்துக்கு அருகாமையில் பியர் மற்றும் மதுபான போத்தல்களும் காணப்பட்டன .

இதனையடுத்து உடனடியாக சாரதியின் சாரதி அனுமதிப்பத்திரத்தை பொலிசார் கைப்பற்றியதோடு பஸ்சில் பயணம் செய்த அனைத்து பயணிகளும் இறக்கப்பட்டு வேறு ஒரு பஸ்ஸில் அனுப்பப்பட்டனர். இதன் மூலம் பயணிகளின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையில் யாழ்ப்பாணம் 512 ஆவது பிரிகேட் இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் ஈடுபட்டனர்.

இதையும் தவறாமல் படிங்க
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பயணம் மேற்கொள்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பயணம் மேற்கொள்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி

இன்று இரவு கொழும்பு சென்ற பேருந்தை துரத்திச் சென்று தமிழ் இளைஞனை கைது செய்த பொலிஸார்

இன்று இரவு கொழும்பு சென்ற பேருந்தை துரத்திச் சென்று தமிழ் இளைஞனை கைது செய்த பொலிஸார்

இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கப்பல் போக்குவரத்து! மகிழ்ச்சியில் மக்கள்

இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கப்பல் போக்குவரத்து! மகிழ்ச்சியில் மக்கள்

loading...