யாழில் உதயமான மாற்று அணி தொடர்பில் நிலைப்பாடுகளை வெளிப்படுத்திய கூட்டணிகள்!

51shares

வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இடம்பெற்றுள்ளது.

தமிழ் மக்கள் கூட்டணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுலை முன்னணி, தமிழ் தேசியக் கட்சி, ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் ஆகிய நான்கு கட்சிகள் இணைந்து இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.

இந்த ஒப்பந்தம் தொடர்பில் நான்கு கட்சிகளின் தலைவர்களும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்த கொண்டனர்.

அந்த வகையில், தமிழ் மக்கள் தேசிய கட்சியின் தலைவர் சீ.வி.விக்னேஸ்வரன் கருத்துத் தெரிவிக்கையில்,

வெறுமனே தேர்தலை வெற்றிகொள்ளும் நோக்கத்துடன் கூட்டணியை தாம் உருவாக்கவில்லை எனவும், பதவியும் சலுகைகளும் முக்கியம் என்று தான் நினைத்திருந்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனேயே ஒட்டிக்கொண்டு இருந்திருப்பேன் எனவும் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருதுரைத்த ஈழ மக்கள் புரட்சிகர விடுலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவிக்கையில்,

தமிழ் மக்களுடைய அடிப்படை கோரிக்கைகளான சுயநிர்னய உரிமை அதனூடாக ஒரு சுயாட்சி போன்ற விடயங்களை ஏற்றுக்கொள்ளக்கூடிய எந்த தரப்பினரும் தங்களுடன் இணைந்து கொள்ள முடியும் என சுரேஸ் பிரேமச்சந்திரன் அறிவித்தல் விடுத்துள்ளார்.

மேலும் தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவரும், சட்டத்தரணியுமான ந.சிறிகாந்தா தெரிவிக்கையில்,

2001 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகளுடைய ஆமோதிப்போடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஸ்தாபிக்கப்பட்ட போது இதே உணர்வுகள், இதே நிலைப்பாடுகள் மற்றும் இதே கருத்துகள் தான் அப்போதும் இருந்தது என ந.சிறிகாந்தா தொரிவித்துள்ளார்.

மேலும் அன்றைய தினம் நான்கு அரசியல் அமைப்புகளின் சார்பிலே கையொப்பமிட்ட, நான்கு பேர்களிலே ஒருவர் அரசியல் அரங்கில் இருந்து ஒதுங்கியிருக்கின்றார் எனவும் எஞ்சிய மூன்று பேர்களிலே தானும், சுரேஸ் பிரேமச்சந்திரனும் இன்று இங்கு உள்ளளோம் என ந.சிறிகாந்தா மேலும் தெரிவித்துள்ளார்.

இதன் போது ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் கருத்துத் தெரிவிக்கையில்,

மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிய ஒரு இணக்க அரசியலுக்குள் சென்றிருந்த கூட்டமைப்பினுடைய போக்கை எதிர்த்து அங்கிருந்து வெளியேறிய தாங்கள் ஒரு கூட்டடாக நிற்கின்றோம் என அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த கூட்டணி ஒருவர் அல்லது இருவரால் கட்டப்பட்டது அல்லாமல் வடக்கு கிழக்கு மலையகம் சார்ந்து மற்றும் உலகத் தமிழர்கள் சார்ந்த ஆதரவை கோரி நிற்கின்றோம் எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்

பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்

இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

விமான நிலையம் திறப்பு தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்

விமான நிலையம் திறப்பு தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்