பொதுத்தேர்தல் களத்தில் விடுதலைப்புலிகள் மக்கள் பேரவை!

32shares

விடுதலைப்புலிகள் மக்கள் பேரவையினர் தமிழ் மக்களின் நலன் சார்ந்து செய்யப்படுவதற்காக அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட புதிய ஒரு அமைப்பாகும். குறித்த அமைப்பினர் யுத்தம் முடிந்து கடந்த 11 வருடங்களாக தமிழ் மக்களுக்கு உரிய தீர்வு கிடைக்காமை, இளைஞர் யுவதிகளின் வேலை வாய்ப்பு மற்றும் இனத்திற்காக போராடி அவயவங்களை இழந்த முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரங்களை மேம்படுத்தல் போன்ற வேலைத்திட்டங்கள் தொடர்பில் செயற்படுகின்றனர்.

இன்று வரை வாழ்வாதார மேம்பாடுகள் எவையும் தமிழ் மக்களை சென்றடைய வில்லை எனவும், எனவே தமிழ் மக்களுக்காக குரல் கொடுப்பதற்கும் அரசியல் ரீதியான தீர்வினை பெற்றுக்கொடுக்கும் முகமாகவும் செயற்பட உள்ளதாகவும் இதற்காக வடக்கு கிழக்கில் உள்ள மதகுருமார்கள் மற்றும் புத்தி ஜீவிகள் ஆகியோரை சந்தித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்து கிறிஸ்தவ மதத் தலைவர்களை சந்தித்து அவர்களுக்கு தமது கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் தெரியப்படுத்த உள்ளதோடு வடக்கில், குறிப்பாக யாழ்ப்பாணத்தில் உள்ள முன்னாள் போராளிகள் மற்றும் பொதுமக்களுடன் சந்திப்பினை மேற்கொள்ளவுள்ளதாகவும் குறித்த கட்சியினர் தெரிவித்துள்ளார்கள்.

இதையும் தவறாமல் படிங்க
இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்

பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு வெளிவந்த மகிழ்ச்சியான செய்தி

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு வெளிவந்த மகிழ்ச்சியான செய்தி