சிங்கள இனத்திற்காகவே நான்: மதுமாதவ அரவிந்த சூளுரை

39shares

கம்பஹா மாவட்டத்தில் சிங்கள இனத்திற்காக குரல் கொடுத்து வரும் பலத்தை ஒருபோதும் இழக்கப்போவதில்லை என்று எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மொட்டுச் சின்னத்தில் போட்டியிடவுள்ள பிவித்துரு ஹெல உறுமயவின் பிரதித் தலைவரான மதுமாதவ அரவிந்த தெரிவித்துள்ளார்.

கம்பஹா – நீர்கொழும்பு பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.

சிங்கள இனத்திற்காக தாம் எப்போதும் குரல் கொடுப்பதாக அவர் தெரிவித்தார்.

“கம்பஹாவில் 13 தொகுதிகளிலும் உள்ள அரசியல்வாதிகள் எம்மை ஆசிர்வதிக்கின்றனர். சிலர் என்னுடன் தொடர்புகொண்டு, தங்களால் சொல்லமுடியாதவைகளையும் நீங்கள் சொல்லுவதாக என்னைப் பாராட்டினார்கள்.

சிங்களக் குரலை கம்பஹா மாவட்டத்தில் உயர்த்துவோம் என்று கூறும்போதே பலரும் எமது பக்கத்தைப் பலப்படுத்துகிறார்கள்.

நாங்கள் எப்போதும் லன்சா உட்பட மாவட்டத்திலுள்ள ஏனைய அரசியல்வாதிகளை மிஞ்சி நாங்கள் போவதில்லை. இனத்திற்காக நான் பேசுகின்றேன்.

எனது தலைவர் உதய கம்மன்பிலவும் எம் இனத்திற்காக அதிக குரல் கொடுத்து வருபவர். அனைவரும் இனவாத அரசியலை எதிர்பார்க்கின்றனர். அதனால் இந்த 13 தொகுதிகளிலும் இதனையே கோருகின்றனர்.

சிங்கள இனத்திற்காக வழங்கிய ஆணையை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டேன் என்பதே மக்களுக்கு நான் இன்று வழங்குகின்ற வாக்குறுதியாகும்” என்றார்.

இதையும் தவறாமல் படிங்க
இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

விமான நிலையம் திறப்பு தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்

விமான நிலையம் திறப்பு தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு வெளிவந்த மகிழ்ச்சியான செய்தி

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு வெளிவந்த மகிழ்ச்சியான செய்தி